முகலாய புதயலை தேடிய மக்கள்… சாவா படத்தைப் பார்த்த ரசிகர்களின் செயல்!

chavaa
chavaa
Published on

விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் வெளியான சாவா படத்தின் எதிரொலியாக கிராம மக்கள் சிலர் தங்க புதயலை தேடும் பணியில் ஈடுப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.

லக்ஷ்மன் உடேகர் இயக்கிய சாவா திரைப்படத்தில் விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் இந்து ராஜ்ஜியம் கண்ட சத்ரபதி சிவாஜியின் புதல்வர் சாம்பாஜி பேரரசரின் வாழ்க்கையைச் சொல்லும் திரைப்படமாக அமைந்தது.

மராத்தி நாவலான சாவாவை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். சாம்பாஜி சத்ரபதி சிவாஜிக்கு அடுத்ததாக ஆட்சி செய்தார். மத்திய பிரதேசத்தில், புர்ஹான்பூர் மாவட்டத்தில், 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆசிர்கர் கோட்டை உள்ளது. இந்த பழங்கால கோட்டை சாவா திரைப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

முகலாய பேரரசர் அக்பருடன் தொடர்புடைய இந்த கோட்டை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மராட்டியர்களுக்கு எதிரான படையெடுப்புகளின்போது, முகலாயர்கள் கொள்ளையடித்த தங்கம் உள்ளிட்ட விலைமதிப்பு மிக்க ரத்தினங்கள் ஆசிர்கர் கோட்டையை சுற்றிலும் மண்ணுக்குள் இருப்பதாக புனைகதைகள் உள்ளன.

திரைப்படம் வெளியானததை தொடர்ந்து இந்த கோட்டையை சுற்றி தங்கம் புதைந்து இருப்பதாக வதந்திகள் பரவின.  இதனால் கோட்டையைச் சுற்றியுள்ள பகுதியில் புதையலைத் தேடி குழிகள் தோண்டினார்கள். இரவு 7 மணிக்குத் தொடங்கி அதிகாலை 3 மணி வரை கிராம மக்கள் கோட்டையைச் சுற்றி புதையல் தேடியுள்ளனர்.

இதுகுறித்தான வீடியோ வைரலாகி வருகிறது.  கோட்டையைச் சுற்றி குழிகள் தோண்டுவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், புர்ஹான்பூர் மாவட்ட ஆட்சியர் ஹர்ஷ் சிங் தெரிவித்துள்ளார். ஒருவேளை புதையல் கிடைத்தால் அது அரசுக்கு சொந்தமானது என்று கூறப்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிராவில் சாவா திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. புஷ்பா 2 படத்தின் மொத்த வசூலை விட அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

15 நாட்களில் புஷ்பா 2 படத்தின் வசூலை முறியடித்தது சாதாரண விஷயம் அல்ல. புஷ்பா 2 திரைப்படம் மகாராஷ்டிராவில் 240 கோடி வசூல் செய்தது. ஆனால் சாவா திரைப்படம் 15 நாட்களில் 260 கோடி வசூல் செய்து அந்த சாதனையை முறியடித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் 8 அன்றாட பழங்கங்கள்!
chavaa

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com