பிரதமர் மோடி புகழாரம்! பாஃப்டா விருதை வென்று உலகைத் திரும்பி பார்க்க வைத்த 'பூங்'..!

BOONG MOVIE
BOONG MOVIE
Published on

எந்த மொழியாக இருந்தாலும் உணர்வு பூர்வமான படைப்புகளுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என்பதை நிரூபித்துள்ளது மணிப்பூரி மொழியில் அறிமுகமான 'பூங்' (BOONG) திரைப்படம். இத்திரைப்படம் சிறந்த குழந்தைகள் மற்றும் குடும்பத் திரைப்படத்திற்கான பாஃப்டா ( BAFTA ) எனும் பிரிட்டிஷ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி அகாடமி விருதை வென்ற முதல் இந்தியத் திரைப்படமாக வரலாற்றைப் படைத்துள்ளது.

ஃபர்ஹான் அக்தரின் எக்செல் என்டர்டெயின்மென்ட் தயாரித்த மணிப்பூரி திரைப்படமான பூங், மணிப்பூரில் உள்ள சமூக பதட்டங்களுக்கு மத்தியில் இளம் சிறுவன் தனது தாய்க்கு இறுதி பரிசாக தனது குடும்பத்தை மீண்டும் ஒன்றிணைக்கும் தேடலின் பயணத்தை உணர்வு பூர்வமான காட்சிகளால் விவரிக்கிறது.

லண்டனின் ராயல் ஃபெஸ்டிவல் ஹாலில் நடைபெற்ற விருது விழாவில், இயக்குனர் லட்சுமிப்பிரியா தேவியுடன் இணைந்து தயாரிப்பாளர் ஃபர்ஹான் அக்தர், ரித்தேஷ் சித்வானி, ஆலன் மெக்அலெக்ஸ் ஆகியோர் விருதை பெற்றனர். அப்போது மேடையில் பேசிய ஃபர்ஹான் அக்தர், "லட்சுமிப்பிரியாவும் நானும் சுமார் 20 ஆண்டுகளாக ஒருவரையொருவர் அறிவோம். இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நடக்கும் கதையாக இது அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வரும் படங்களை நாம் காண்பது மிகவும் அரிது. மனதைக் கவரும் இக்கதையை ஆதரிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்," என்று உணர்வுபூர்வமாக தெரிவித்தார்.

BAFTA-வின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் இயக்குனர் லட்சுமிப்ரியா தேவி விருதை ஏற்றுக்கொள்வது போன்ற ஒரு காணொளி வெளியிடப்பட்டது. மேலும் அதில் "குரும்ஜாரி" என்ற பாரம்பரிய வாழ்த்துச் செய்தியுடன் "இங்கு வரையிலான நடைப்பயணத்தில் நாங்கள் முதலில் ஏறுவதை அறியாத ஒரு மலையின் உச்சியை அடைவதற்கான கடைசி சில படிகள் போல் உணர்ந்தேன். எனவே எங்கள் மிகச் சிறிய படத்திற்கு இவ்வளவு பெரிய அன்பை வழங்கியதற்காக நடுவர் மன்ற உறுப்பினர்களுக்கும் BAFTA-விற்கும் நன்றி" என்று கூறியுள்ளார். மதிப்புமிக்க கோப்பையைப் பெற்ற பிறகு, படத்தின் அறிமுக தனது ஏற்புரையில் அமைதிக்கான உணர்ச்சிபூர்வமான வேண்டுகோளை அவர் விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சிறப்பாக 79வது பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகளில் (BAFTA) மதிப்புமிக்க 'சிறந்த குழந்தைகள் & குடும்ப திரைப்படம்' விருதை வென்ற மணிப்பூரி திரைப்படமான "பூங்"-ஐ பிரதமர் நரேந்திர மோடி சமூக ஊடகங்களில் வாழ்த்தியுள்ளார்.

பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ "எக்ஸ்"PM Modi's official X (முன்னர் ட்விட்டர் என்று அழைக்கப்பட்டது) பக்கத்தில், "இந்தப் படத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியின் தருணம், குறிப்பாக மணிப்பூருக்கு. இது நமது நாட்டின் மகத்தான படைப்புத் திறமையையும் எடுத்துக்காட்டுகிறது." என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படம் 2024 டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் டிஸ்கவரி பிரிவில்(2024 Toronto International Film Festival's Discovery section ) திரையிடப்பட்டது. இது வார்சா 2024 (Warsaw 2024)மாமி மும்பை 2024(MAMI Mumbai 2024) இந்திய சர்வதேச திரைப்பட விழா(International Film Festival of India) மற்றும் மெல்போர்ன் 2025 இந்திய திரைப்பட விழா(Indian Film Festival of Melbourne 2025.) உள்ளிட்ட நிகழ்வுகளில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

டிஸ்னியின் "லிலோ & ஸ்டிட்ச்" (Lilo & Stitch), "ஜூட்ரோபோலிஸ் 2" (Zootropolis 2) போன்ற உலகத்தரம் வாய்ந்த படங்களுடன் போட்டியிட்டு வென்ற ஒரே இந்தியப் படமான "பூங்", மணிப்பூரின் அரிய ரத்தினத்தை உலக வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இவெற்றி இந்திய சினிமாவிற்கு உலகளாவிய ஊக்கத்தை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது என அனைவராலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்:
70வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் அறிவிப்பு..! விருதுகளை அள்ளிய அமரன் , புஷ்பா 2..!
BOONG MOVIE

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com