ஜெயித்ததா கல்கி 2898 AD... முதல் நாள் வசூல் விவரம் இதோ!

Kalki 2898 AD
Kalki 2898 AD

பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள கல்கி 2898 AD திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ படமாக உருவாகி வரும் கல்கி படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமலஹாசன், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்துள்ளனர். இது சூப்பர் ஹீரோ படமாக அதிக பட்ஜட்டில் உருவாகியுள்ளதால் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

கலியுகத்தில் கிருஷ்ணன் அவதாரத்தைத் தழுவியும் இந்தப் படத்தை எடுத்திருப்பதாக செய்திகள் வந்தன. இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக இப்படம் இந்த ஆண்டு மே மாதம் 9ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. ஆனால் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில்தான் படத்தின் பாடல் காட்சிகளும் விட்டுப்போன சில காட்சிகளும் படம்பிடிக்கப்பட்டன. இந்தப் படப்பிடிப்பிற்காகப் படக்குழு இத்தாலி சென்று வந்தது. படப்பிடிப்பு ஒருபக்கமும் மறுபக்கம் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்தன. இந்த படத்தின் வெளியீட்டுத் தேதி சமீபக்காலமாக பல காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.

ஒருவழியாக நேற்று இந்த படம் உலகளவில் வெளியாகி வரவேற்பை பெற்றது. பல ட்விஸ்ட்களை கொண்ட இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. சுமார் 600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்தது என்றே சொல்லலாம். படத்தின் முதல் பாதி மெதுவாக செல்வதாக விமர்சனம் வந்தாலும், இரண்டாம் பாதியில் படம் பட்டாசாக இருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: ‘கல்கி 2898 AD’ - உயிர் இல்லாத ஓவியம்!
Kalki 2898 AD

முதல் நாளிலேயே உலகளவில் ரூ.180 கோடி வசூலை வாரிக்குவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.95 கோடி வசூலை அள்ளி இருக்கிறதாம்.

இதன்மூலம் முதல்நாளில் அதிக வசூல் அள்ளிய இந்திய திரைப்பட பட்டியலில் 3வது இடம் பிடித்துள்ளது கல்கி திரைப்படம். இதற்கு முன்னர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் நடித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ரூ.223 கோடி வசூலித்ததே சாதனையாக உள்ளது. அடுத்ததாக ரூ.217 கோடி வசூலுடன் பாகுபலி 2 திரைப்படம் இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு வெளிவந்த பிரபாஸின் சலார் முதல் நாளில் ரூ.158 கோடியும், விஜய்யின் லியோ ரூ.142.75 கோடியும் வசூலித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com