

அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ,பிரதீப் மற்றும் அறிமுக நாயகி மமிதா பைஜு ஆகியோர் நடித்த டியூட் திரைப்படம் , தீபாவளிக்கு திரைக்கு வந்து கலவையாக விமர்சனங்களை பெற்றது. இந்த திரைப்படத்தின் மூலம் சாய் அபியங்கர் இசையமைப்பாளராக அறிமுகமானார் .மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படம் 100 கோடி பாக்ஸ் ஆபீஸில் நுழைந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிரதீப் ரங்கநாதன் 100 கோடி பாக்ஸ் ஆபீஸில் 3 முறை நுழைந்து ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளார்.
ரவி மோகன் நடித்த கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் பின்னர் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த லவ் டுடே திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று 100 கோடிக்கும் மேல் வசூலை குவித்தது. இதை தொடர்ந்து அவர் நடித்த இரண்டாவது திரைப்படமான டிராகனும் நல்ல வெற்றியை பெற்றது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத கதாநாயகனாக பிரதிப் உள்ளார்.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK என்ற திரைப்படத்தில் பிரதிப் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பணிகள் பெரும்பாலும் முடிந்து விட்டதால் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு திரைப்படத்தை தானே இயக்கி நடிக்க உள்ளார். அறிவியலை மையமாகக் கொண்ட திரைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட உள்ளது.
இது பற்றி முன்பு, டியூட் திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போதே பிரதிப் ரங்கநாதன் கூறியிருந்தார். LIK திரைப்படத்திற்குப் பின்னர், தான் ஒரு அறிவியல் புனைகதை திரைப் படத்தை எடுக்க விரும்பியதாக தெரிவித்திருந்தார். பிரதீப் இயக்கிய கோமாளி திரைப்படம் வெற்றி பெற்ற பின்னர் , லியோ திரைப்படத்தில் விஜய் நடிக்க ஒப்பந்தமாகும் முன்னர் , பிரதிப் விஜய்யிடம் ஒரு அறிவியல் புனைகதை கதையைச் சொன்னதாக மீடியா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
விஜயின் அவரது 67வது படமாக இது உருவாக இருந்தது. ஆனால் சரியான திட்டமிடல் இல்லாதது மற்றும் ஒரு சில காரணங்களால் அந்தத் திரைப்படம் அப்போது தள்ளி போனது .அதன் பின்னர் பிரதீப்பும் நடிகராக மாறி தொடர் வெற்றி பெற்று பிசியாகி விட்டார். லவ் டுடே படத்திற்குப் மீண்டும் ஒரு திரைப்படத்தை தானே இயக்கி பிரதீப் நடிக்க உள்ளார்.முன்பு விஜயிடம் கூறிய அதே கதையை தான் மீண்டும் பிரதீப் திரைப்படமாக எடுக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
விஜய்க்கு உருவாக்கிய கதையை அவர் அப்படியே எடுக்காமல் , தனக்கு ஏற்றது போல கதையில் பல மாறுதல்களை கொண்டு வருவார். இந்த திரைப்படம் அவர் ஏஜிஎஸ் நிறுவனத்துடன் இணையும் 4 வது திரைப்படம் ஆகும். இதற்கு முன்னர் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த கோமாளி திரைப்படத்தை பிரதீப் இயக்கியுள்ளார். அதன் பின்னர் அதே நிறுவனத்தின் தயாரிப்பில் கதாநாயகனாக ‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ ஆகிய இரு திரைப்படங்களில் நடித்துள்ளார்.