கோட் படத்தில் விஜயகாந்த்... நெகிழ்ச்சியில் பிரேமலதா..!

Premalatha Vijayakanth
Premalatha Vijayakanth

கோட் படத்தில் விஜயகாந்த் நடித்திருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதை பார்த்த பிரேமலதா விஜயகாந்த் நெகிழ்ச்சியடைந்துள்ளாராம்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்திற்கு 'GOAT' என தலைப்பிடப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் கலக்கி வந்து கொண்டிருக்கிறார். தற்போது வருடத்திற்கு ஒரு படம் கொடுத்து வந்த விஜய், அதற்கும் எண்ட் கார்ட் போட்டுள்ளார். அதாவது அரசியலில் நுழைவதால் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என அறிவித்துவிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து ஒரு படத்தில் மட்டுமே நடிப்பதாகவும் கூறிவிட்டார். சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், முழுநேரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இதையும் படியுங்கள்:
10 வருடங்களுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுக்கும் காதலிக்க நேரமில்லை 'சந்திரா'... என்ன சீரியல் தெரியுமா?
Premalatha Vijayakanth

இந்த படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக படக்குழுவினர் AI தொழிநுட்பத்தை பயன்படுத்தி விஜயகாந்தை நடிக்க வைத்துள்ளனர். இதற்காக விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிடம் அனுமதி பெற்றுள்ளனர் படக்குழுவினர். படத்தில் விஜயகாந்த் நடித்துள்ள காட்சி மொத்தம் 2.30 நிமிடங்கள் என்றும், இந்த காட்சி படத்தின் ப்ரீகிளைமாக்ஸ் கட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படமாக்கப்பட்ட விஜயகாந்த் காட்சியை பிரேமலதாவிடம் போட்டு காட்டியுள்ளார் வெங்கட் பிரபு. காட்சிகளை பார்த்த பிரேமலதா விஜயகாந்த் பிரம்மித்து போய்விட்டாராம். படத்தில் விஜயகாந்த் நடிக்கும் அந்த கட்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலாய் காத்திருக்கின்றனர்.

பிரபல நடிகராக வலம் வந்த நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் இவ்வுலகை விட்டு மறைந்தார். இவரின் மறைவுக்கு ஒட்டு மொத்த தமிழகமும் ஒன்று கூடிய நிலையில், இவரை மீண்டும் திரையில் காண்பிக்கவுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com