பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ப்ரேமலு நடிகை!

Pradeep and Mamitha
Pradeep and Mamitha

இயக்குனர் மற்றும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன், ஒரு புதிய படத்தில் கம்மிட்டாகியுள்ளார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரேமலு நடிகை மமிதா பைஜூ நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் கோமாளி படத்தின்மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப், தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஜெயம்ரவி நடித்த கோமாளி படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

ஆனால், அப்போது அந்தப் படத்தின் இயக்குனரை அவ்வளவாக யாரும் கண்டுக்கொள்ளவில்லை. அதன்பின்னர் லவ் டுடே படத்தை இயக்கி நடித்திருந்தார் பிரதீப். அப்படம் தமிழ்நாடு முழுவதும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அப்போதுதான் பலருக்கும் தெரிந்தது, லவ் டுடே படத்தை இயக்கி ஹீரோவாக நடித்தவர்தான் கோமாளி படத்தின் இயக்குனரும் என்று. இப்படமே அவர் தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக வலம் வர காரணமாயிற்று.

அதன்பின்னர் இயக்குனர் பிரதீப், படத்தை இயக்குவதற்கான அறிகுறிகள் எதுவுமே இல்லை. ஏனெனில், அவர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக கம்மிட்டாகி வருகிறார். தற்போது அவர் விக்னேஷ் சிவன் இயக்கும் 'எல்ஐசி' படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவியாளராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்க உள்ளார்.

மைத்ரி மூவிஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தில் பிரதீப்பிற்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கவுள்ளார்.

மமிதா முதலில் ஃப்ரெண்ட் கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தனது நடிப்புத் திறமையினால் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்தவகையில் நஸ்லன் மற்றும் மமிதா இணைந்து நடித்த ப்ரேமலு திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனைப் படைத்தது. இதனையடுத்து மமிதாவிற்கு தமிழ் படங்கள் உட்பட பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. சமீபத்தில் கூட ஜிவி பிரகாஷுடன் Rebel என்ற படத்தில் இணைந்து நடித்தார் மமிதா.

இதையும் படியுங்கள்:
புஷ்பா 2வின் 'சூடான தீ' பாடல் வெளியீடு... எப்படி இருக்கு தெரியுமா?
Pradeep and Mamitha

அந்தவகையில் தற்போது பிரதீப்புடன் இணைந்து நடிக்கவுள்ளார். மமிதாவிற்கு தமிழ் ரசிகர்கள் அதிகம். ஆகையால், இப்படம் பெரிய எதிர்ப்பார்ப்பைத் தாங்கி நிற்கிறது. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று சொல்லப்படுகிறது.

3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ப்ரேமலு 100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாகக் கூறப்பட்டது. அதேபோல் இப்படமும் வெற்றிபெற்றால், மமிதாவின் மார்க்கெட் கூடிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com