புஷ்பா 2வின் 'சூடான தீ' பாடல் வெளியீடு... எப்படி இருக்கு தெரியுமா?

Pushpa 2
Pushpa 2

புஷ்பா 2 படத்தின் 2வது பாடல் வெளியாகிய நிலையில் ரசிகர்கள் அதை வைப் செய்து வருகின்றனர்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா தி ரூல். இப்படம் 170 முதல் 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 360 முதல் 373 கோடி வரை வசூல் செய்தது. இப்படத்தில் வரும் ஸ்ரீவள்ளி பாடலின் அல்லு அர்ஜூன் நடனம் உலகம் முழுவதும் பிரபலமானது. அதேபோல் சமந்தா ஆடிய படத்தின் தொடக்கப்பாடலும் பல சர்ச்சைகளுக்கு நடுவிலும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது. புஷ்பா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்த பாகத்தின் எதிர்ப்பார்ப்பு கூடியது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முத்தம் செட்டி மீடியா தயாரித்துள்ள, 'புஷ்பா 2: தி ரூல்' ஆகஸ்ட் 15, 2024 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சந்தன கடத்தல் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுத்த இந்தப் படத்தின் முதல் பாகம், ஏராளமான விருதுகளை வாங்கியுள்ளது. அதேபோல் அல்லு அர்ஜுனும் இப்படத்திற்காக விருதுகளை வாங்கினார். சமீபத்தில் புஷ்பா 2 திரைப்படத்தின் டீசர் வெளியானது. இதனைத்தொடர்ந்து ‘புஷ்பா புஷ்பா’ என்ற முதல் பாடலின் லிரிக் வீடியோவும் வெளியானது. இந்த பாடலை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து இன்ஸ்டாகிராமில் அதிகமானோர் ரீல்ஸ் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது இரண்டாவது பாடலான 'Soodaana (The Couple Song)' என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. புஷ்பா முதல் பாகத்தில் எப்படி ‘சாமி’ மற்றும் 'ஸ்ரீவள்ளி' பாடல் இருக்குமோ, அதே அளவிற்கு இந்தப் பாடலும் இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சற்று மனம் உடைந்துள்ளனர். தேவி ஸ்ரீயின் அனைத்து பாடல்களும் ரசிகர்களை எழுந்து ஆட வைக்கும் நிலையில், இந்த பாடல் சற்று மந்தமாக இருப்பதாக் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
ஜோஜு ஜார்ஜ் இயக்குனர் அவதாரத்தில் உருவான 'பானி'... மாஸாக வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
Pushpa 2

இந்த பாடலை தமிழில் விவேகா எழுதியுள்ள நிலையில் ஸ்ரேயா கோஷல் அனைத்து மொழிகளிலும் இப்பாடலை பாடியுள்ளார். முதல் பாகத்தில் "சாமி" பாடல் பலத்த வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இந்த பாடல் மெலடியாக அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 மொழிகளில் இந்த பாடல் வெளியாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com