பிரைம் வீடியோ தளத்தில், ‘வதந்தி’

பிரைம் வீடியோ தளத்தில், ‘வதந்தி’

ந்திய அளவில் மிகவும் அதிகளவில் விரும்பிப் பார்க்கப்படும் பொழுதுபோக்கு மையமான பிரைம் வீடியோ, இன்று அமேசான் ஒரிஜினல் தொடரான, ‘வதந்தி’ தி ஃபேபிள் ஆஃப் வெலோனி திரைப்படத்தின் உலகளாவிய முதல் காட்சி வெளியீட்டை அறிவித்தது. இந்த அதிர வைக்கும் தமிழ் க்ரைம் த்ரில்லரை, புஷ்கர் மற்றும் காயத்ரி இருவரும் இணைந்து, ‘வால்வாட்சர் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் பெயரில் தயாரிக்க, ஆண்ட்ரூ லூயிஸால் உருவாக்கப்பட்டுள்ளது. எட்டு பகுதிகளைக் கொண்ட இந்த த்ரில்லர் திரைப்படத்தை, 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், டிசம்பர் 2ஆம் தேதி முதல் பிரைம் உறுப்பினர்கள் இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் காணலாம்.

இந்த அமேசான் ஒரிஜினல் தொடர் ஸ்ட்ரீமிங் வெளியீட்டில் பன்முகத் திரைப்படக் கலைஞர் எஸ்.ஜே.சூர்யா தனது அறிமுகத்தைத் தொடங்குகிறார். ‘வெலோனி’ என்ற பாத்திரத்தில் நடிகை சஞ்சனா இந்தத் தொடரில் முதல் முதலாக அறிமுகமாகிறார். இவர்களுடன் லைலா, எம்.நாசர், விவேக் பிரசன்னா, குமரன் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் அடங்கிய ஒரு நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்துள்ளது.

‘கிசுகிசுக்கள்’ என்று பொருள்படும் வதந்தி என்ற தலைப்புக்கு இணங்க, நடிகை சஞ்சனா ஏற்றுள்ள கதாபாத்திரம், வதந்திகளால் நிறைந்த ஒரு புதிரான உலகுக்கு அனைவரையும் அழைத்துச் செல்வதாக இந்தக் கதைக்களம் அமைந்துள்ளதாம். சற்று மனக்கலக்கத்துடன் ஆனால், மன உறுதியோடுகூடிய காவல் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யா, பொய்களால் ஆன ஒரு வலையில் தான் சிக்குண்டுள்ளதை அறிகிறார். ஆனாலும், உண்மையைக் கண்டறிவதில் தனது விடா முயற்சியை தொடர்வதாக இந்தக் கதை செல்கிறது.

"எங்கள் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப பல்வேறு கதைக்களங்களை நாங்கள் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, ‘வதந்தி’ - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ கதையை அவர்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். ரசிகர்களை அவர்களது இருக்கையில் கட்டிப்போட வைக்கும் உன்னதமான நடிப்புத் திறன் கொண்ட இதன் நட்சத்திர நடிகர்கள், தங்களது சிறந்த நடிப்பால் இந்தக் கதைக்கு உயிர் ஊட்டியுள்ளனர்" என்று பிரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸின் தலைவர் அபர்ணா புரோஹித் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com