‘சூர்யாவுடன் ஜோடி போடும் ஜான்வி கபூர்‘ தகவல் சொன்ன தந்தை!

சூர்யா - ஜான்வி கபூர்
சூர்யா - ஜான்வி கபூர்
Updated on

நடிகர் சூர்யாவுடன் ஜான்வி கபூர் நடிப்பதை அவரது தந்தை போனி கபூரே உறுதி செய்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவான ‘கங்குவா’ படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கெனவே இருவர் கூட்டணியில் வெளியான ‘சூரரை போற்று’ படம் நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது மதுரையில் 1950 - 1965க்கு இடைப்பட்ட காலத்தில் நடக்கும் கதை என தகவல் வெளியாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக வெற்றிமாறனின் வாடிவாசலை கையில் வைத்திருக்கும் சூர்யா, இந்தி மொழியில் ஓம் பிரகாஷ் இயக்கத்தில் மகாபாரத கதையில் நடிப்பதாக கூறப்பட்டது. இந்த புராண கதையில் நடிகர் சூர்யா கர்ணனாகவும், அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் சூர்யாவின் 'கர்ணன்' படத்தில் ஜான்வி கபூர் நடிப்பதை அவரது தந்தையான தயாரிப்பாளர் போனி கபூர் பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளார். இதனால் சூர்யா ஜோடியாக தமிழில் ஜான்வி கபூர் அறிமுகமாகப்போவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. பான் இந்தியா அளவில் உருவாகும் 'கர்ணன்' படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com