ஹிட்டான ஜெயிலர்.. ரஜினிக்கு காரை பரிசாக கொடுத்த கலாநிதி மாறன்!

ரஜினி - கலாநிதி மாறன்
ரஜினி - கலாநிதி மாறன்

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ஜெயிலர் படம் திரையில் வெளியாகி மாபெரும் வெற்றியை கண்டது. நடிகர் ரஜினியின் அசத்தலான ஸ்டைல் மூலம் ரசிகர்கள் கவர்ந்திழுக்கப்பட்டனர். இதில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர்.

பான் இந்திய நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளதால் நாடு முழுவதும் இந்த படம் ஹிட்டானது. நெல்சனின் கடந்த படம் நல்ல வரவேற்பை பெறாத நிலையில், அவர் மீது விஜய் ரசிகர்கள் கோபமாக இருந்தனர், இந்த நிலையில் ஜெயிலர் படம் ஹிட்டடித்தன் மூலம் நெல்சன் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார். படத்தில் இசையில் பட்டைய கிளப்பியிருந்தார் அனிருத்.

இப்படி பலரும் தங்களது பங்களிப்பால் ஜெயிலரை வெற்றி பெற வைத்துள்ளனர். இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினிக்கு அன்பு பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.

ஜெயிலர் படத்தின் கலக்ஷனில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை அவர், ரஜினிகாந்திற்கு காசோலையாக வழங்கியுள்ளார். மேலும், இரண்டு விளை உயர்ந்த கார்களை ரஜினியிடம் காண்பித்து அவரையே ஒரு காரை தேர்ந்தெடுக்க கூறியிருக்கிறார்.

ரஜினிகாந்த் BMW X7 காரை தேர்ந்தெடுத்தார். அந்த காரையே அவருக்கு பரிசாக கலாநிதி வழங்கியுள்ளார். இந்த தருணத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளது. இதைப்பார்த்த நெட்டிசனகள், “நேற்று பெரிய செக், இன்று பெரிய கார்..சூப்பர் ஸ்டார் காட்டில் மழைதான்..” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மேலும் இயக்குனர் நெல்சனுக்கும் செக் கொடுத்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com