"புஷ்பா 2" 2வது பாடல் எப்போது... வெளியானது மாஸ் அப்டேட்... கொண்டாடும் ரசிகர்கள்!

Pushpa 2
Pushpa 2

புஷ்பா 2 படத்தின் முதல் சிங்கிளின் வைபே இன்னும் ரசிகர்களை விட்டு நீங்காத நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா தி ரூல் பாகம் 1. இப்படம் 170 முதல் 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 360 முதல் 373 கோடி வரை வசூல் செய்தது. இப்படத்தில் வரும் ஸ்ரீவள்ளி பாடலின் அல்லு அர்ஜூன் நடனம் உலகம் முழுவதும் பிரபலமானது. அதேபோல் சமந்தா ஆடிய படத்தின் தொடக்கப்பாடலும் பல சர்ச்சைகளுக்கு நடுவிலும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது. புஷ்பா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்த பாகத்தின் எதிர்ப்பார்ப்பு கூடியது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முத்தம்செட்டி மீடியா தயாரித்துள்ள, 'புஷ்பா 2: தி ரூல்' ஆகஸ்ட் 15, 2024 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சந்தன கடத்தல் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுத்த இந்தப் படத்தின் முதல் பாகம், ஏராளமான விருதுகளை வாங்கியுள்ளது. அதேபோல் அல்லு அர்ஜுனும் இப்படத்திற்காக விருதுகளை வாங்கினார். சமீபத்தில் புஷ்பா 2 திரைப்படத்தின் டீசர் வெளியானது. இதனைத்தொடர்ந்து ‘புஷ்பா புஷ்பா’ என்ற முதல் பாடலின் லிரிக் வீடியோவும் வெளியானது.

இதையும் படியுங்கள்:
நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் அட்மிட்... ரசிகர்கள் அதிர்ச்சி!
Pushpa 2

இந்த நிலையில், 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 'சூசெகி (The Couple Song)' என்ற பாடல் வருகிற 29ஆம் தேதி காலை 11.07 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புஷ்பா முதல் பாகத்தில் எப்படி ‘சாமி’ மற்றும் 'ஸ்ரீவள்ளி' பாடல் இருக்குமோ, அதே அளவிற்கு இந்தப் பாடலும் இருக்கும் என்று ரசிகர்களால் கணிக்கப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இப்பாடல் ஒரு காதல் பாடலாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com