இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வெளியாக இருக்கும் புஷ்பா 2 திரைப்படம் சினிமா துறையில் இதுவரை இல்லாத அளவிற்கு வசூல் சாதனையை படைக்கும் என்று ரிப்போர்ட் வெளியாகியிருக்கிறது. இதனால் புஷ்பா 2 திரைப்படத்தின் ஹேஷ்டேக் x தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் , ராஷ்மிகா நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா தி ரூல் பாகம் . இப்படம் 170 முதல் 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 360 முதல் 373 கோடி வரை வசூல் செய்தது. இப்படத்தில் வரும் ஸ்ரீவல்லி பாடலின் அல்லு அர்ஜூன் நடனம் உலக முழுவதும் பிரபலமானது.
அதேபோல் சமந்தா ஆடிய படத்தின் தொடக்கப்பாடலும் பல சர்ச்சைகளுக்கு நடுவிலும் ரசிகர்களைப் பெற்றது. புஷ்பா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்த பாகத்தின் எதிர்ப்பார்ப்பு கூடியது. ஆன்லைன் புக்கிங் ஆப் ஒரு புதிய அம்சத்தை வெளியிட்டது. அதாவது ஒரு மணி நேரத்தில் ஒரு படத்தின் டிக்கெட் எண்ணிக்கையை கணக்குக்காட்டும் அம்சம் அது . ரசிகர்களின் எதிர்பார்ப்பு மற்றும் படத்தின் ப்ரோமோஷனைக் கணக்கில் வைத்து தோராயமாக எவ்வளவு டிக்கெட் விற்பனையாகும் எனவும் அந்த ஆப் கணக்கிடும்.
அந்தவகையில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வெளியான ஜவான் திரைப்படம் ஒரு மணி நேரத்தில் 86,000 டிக்கெட்டுகளை விற்றது. இந்த ரெக்கார்டை நிச்சயம் ‘சலார்’ அல்லது ‘அணிமல்’ முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரன்பீர் கப்பூர் மற்றும் ராஷ்மிகா நடித்து வெளியான ‘அணிமல்’ திரைப்படம் ஒரு மணி நேரத்தில் 84,000 டிக்கெட்டுகளே விற்பனையானது. பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படமும் ஜவானின் ரெக்கார்டை முறியடிக்கவில்லை.
இந்தநிலையில் ஆன்லைன் புக்கிங் ஆப் ரிப்போர்ட்டின்படி புஷ்பா பாகம் 2, 1 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் புஷ்பா பாகம் 1 ன் வரவேற்பும், அப்படத்தால் ஏற்பட்ட எதிர்ப்பார்ப்பும் தான். மேலும் படத்தின் ப்ரமோஷன் வேலைகளும் அதிகம் நடக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
புஷ்பா திரைப்படம் இந்தியாவில் மதம், மொழி, கலாச்சாரம் தாண்டி நாடு முழுவதும் எதிர்பார்க்கப்படும் ஒரு படமாகவே இருந்து வருகிறது. இதற்கு காரணம் படத்தின் கதை, திரைக்கதை, மற்றும் படத்தின் தரமே. இதுவே புஷ்பா பாகம் 2ன் எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் புஷ்பா 2 திரைப்படம் இந்திய சினிமாவின் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.