பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் புஷ்பா 2... குஷியான ரசிகர்களுக்கு மேலும் ஒரு சர்ப்ரைஸ்!

புஷ்பா 2
புஷ்பா 2

74ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் புஷ்பா 2 – தி ரூல் திரையிடப்பட உள்ள அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தெலுங்கு படங்கள் தற்போது அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்து வருகிறது. நான் ஈ, மகதீரா, பாகுபலி, புஷ்பா போன்ற படங்கள் பளாக் பஸ்டரை கொடுத்தது. இப்போது புஷ்பா படத்திற்காக சிறந்த நாயகன் என்ற தேசிய விருதை அல்லு அர்ஜுன் பெறுகிறார். இதில் என்ன சிறப்பான விஷயம் என்றால் தெலுங்கு சினிமாவில் தேசிய விருது பெறும் முதல் நடிகர் இவர்தான்.

எனவே அல்லு அர்ஜுன் மீது ரசிகர்களின் பார்வை அதிகம் இப்போது உள்ளது. சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு ரூ.170 முதல் ரூ.250 கோடி பட்ஜெட்டில் தயாராகி வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் ரூ.350 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.

இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் என பல முன்னணி நடிகர்களும் அட்டகாசமாக நடித்திருந்தனர். இதில் வரும் ஸ்ரீவல்லி பாடலை சித்ஸ்ரீராம் பாடியிருப்பார். இந்த பாடல் உலகம் முழுவதும் ட்ரெண்டானது. மேலும் இந்த படத்தில் வரும் ஊ சொல்றியா மாமா பாடல் பட்டி தொட்டியெல்லாம் பரவியது. இந்த ஒரு பாடலில் மட்டும் சமந்தா நடனமாடி அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். 5 மொழிகளில் வெளியான இந்த பாடல் பலரையும் ரசிக்க செய்தது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

பேன் இந்தியா படமாக புஷ்பா முதல் பாகம் உலகளவில் ஹிட்டானது. இந்த படத்தின் 2ஆம் பாகம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருவதாகவும், இப்படம் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகிவிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அல்லு அர்ஜுன் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்கள்:
பிரம்மாண்ட கேக்... தடபுடல் விருந்து... மாஸாக பிறந்தநாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!
புஷ்பா 2

இந்த நிலையில் 74வது பெர்லின் சர்வதேச திரைப்படவிழாவில் புஷ்பா படம் திரையிடப்படுகிறது. இதில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன், புஷ்பா படத்தின் மூன்றாம் பாகம் குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக பிரபல ஆங்கில இணையதளத்திற்கு பேட்டியளித்த அவர், நிச்சயமாக புஷ்பா படத்தின் மூன்றாம் பாகத்தை எதிர்பார்க்கலாம். நாங்கள் அதை ஒரு தொடராக உருவாக்க விரும்புகிறோம். அற்புதமான யோசனைகளும் திட்டங்களும் அடுத்தடுத்து உள்ளன. புஷ்பா 1 இல் பார்த்ததை விட புஷ்பா 2வில் வித்தியாசமான புஷ்பாவை பார்ப்பீர்கள். அதைவிட பெரிய படமாகவும் இருக்கும் என்றார். அடுத்தடுத்து புஷ்பா படத்தின் அப்டேட்கள் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com