வெறும் 200 நாள் தான்.. கவுண்டவுன் தொடக்கம்.. வந்தாச்சு புஷ்பா 2 அப்டேட்!

புஷ்பா 2
புஷ்பா 2விஜி

புஷ்பா 2 படத்தின் அப்டேட் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட புஷ்பா 2 திரைப்படம், சில காரணங்களுக்காக தள்ளிபோனது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் , ராஷ்மிகா நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் புஷ்பா தி ரூல் பாகம் . இப்படம் 170 முதல் 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 360 முதல் 373 கோடி வரை வசூல் செய்தது. இப்படத்தில் வரும் ஸ்ரீவல்லி பாடலின் அல்லு அர்ஜூன் நடனம் உலக முழுவதும் பிரபலமானது.

அதேபோல் சமந்தா ஆடிய படத்தின் தொடக்கப்பாடலும் பல சர்ச்சைகளுக்கு நடுவிலும் ரசிகர்களைப் பெற்றது. புஷ்பா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்த பாகத்தின் எதிர்ப்பார்ப்பு கூடியது. பகத் பாசிலின் டர்னிங் பாயிண்டாக முதல் பாகத்தின் கதை முடிந்ததால் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
தனுஷ் பட ஷூட்டிங்கால் ஸ்தம்பித்த திருப்பதி.. கடும் அவதியில் பக்தர்கள்!
புஷ்பா 2

தற்போது புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் வெளியாக இன்னும் 200 நாட்களே உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்துள்ளனர். புஷ்பா படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com