ராயன் படம் ரிலீஸ் தேதி எப்போது... தனுஷ் கொடுத்த மாஸ் அப்டேட்!

Raayan Movie
Raayan Movie

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ராயன் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனுஷ், தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தனுஷ் தனது 50-ஆவது படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தின் பெயர் தான் ‘ராயன்’ இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே சூர்யா, சுதீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தையே களமிறங்கியுள்ளார் நடிகர் தனுஷ். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் அப்டேட் அவ்வப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளறியுள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர் ரஹ்மானின் கான்செர்ட் நடைபெறும் எனவும், மேலும் இதுவரை தனுஷை வைத்து படம் இயக்கிய இயக்குனர்களை வரவைத்து அவர்களை சிறப்பிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் வெளியானது. இப்பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்கம் செய்துள்ளார். தனுஷ் எழுத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இந்த பாடலை தனுஷ் - ஏ.ஆர்.ரஹ்மானும் சேர்ந்து பாடியுள்ளனர். இந்த பாடல் ஹிட்டான நிலையில், 2வது பாடலும் ட்ரெண்டானது.

இந்த நிலையில் ராயன் படத்துடைய பின்னணி இசை நிறைவு பெற்றுள்ளதாக தனுஷ் தனது சமூக வலைதள பக்கங்களில் சமீபத்தில் கூட அப்டேட் கொடுத்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த படம் ஜூன் 13ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், வரும் ஜூலை மாதம் 26 ஆம் தேதி "ராயன்" திரைப்படம் உலக அளவில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com