இன்று வெளியாகும் ராயன் பட 2வது பாடல்... குஷியில் தனுசு ரசிகர்கள்!

Raayan Movie
Raayan Movie

தனுஷ் ராயன் படத்தின் 2வது பாடல் இன்று வெளியாகவுள்ளது.

கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனுஷ், தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தனுஷ் தனது 50-ஆவது படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தின் பெயர் தான் ‘ராயன்’ இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே சூர்யா, சுதீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தையே களமிறங்கியுள்ளார் நடிகர் தனுஷ். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் அப்டேட் அவ்வப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளறியுள்ளது. தற்போது படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்ட முறையில் ஜூன் 1 ஆம் தேதி ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர் ரஹ்மானின் கான்செர்ட் நடைபெறும் எனவும், மேலும் இதுவரை தனுஷை வைத்து படம் இயக்கிய இயக்குனர்களை வரவைத்து அவர்களை சிறப்பிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலையடுத்து தனுஷ் ரசிகர்கள் குதூகலத்தில் உள்ளனர். தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் திரைப்படம் ஜூன் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
விஜய் டிவி பாக்கியலட்சுமிக்கு போட்டியாக வரும் ஜீ தமிழ் பாக்கியலட்சுமி..!
Raayan Movie

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் வெளியானது. இப்பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்கம் செய்துள்ளார். தனுஷ் எழுத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இந்த பாடலை தனுஷ் - ஏ.ஆர்.ரஹ்மானும் சேர்ந்து பாடியுள்ளனர். மேலும் பிரபு தேவா இந்த பாடலுக்கு நடன இயக்குநராக உள்ளார். இந்த பாடலை ரசிகர்கள் வைப் செய்தநிலையில் இயக்குனர் செல்வ ராகவனும் பாடலை வெகுவாக பாராட்டியிருந்தார்.

தனுஷ், மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இணைந்து முதல் முறை பாடியுள்ளது இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது. வடசென்னையை மையமாக வைத்து கேங்ஸ்டர் கதையாக இந்த படம் உருவாகி வருவதாக இணையத்தில் தகவல் கசிந்து வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இன்று வெளியாகவுள்ள 2வது பாடலை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். இந்த பாடலும் தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு வைபாக அமையும் என நம்பப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com