1700 கோடி வசூல் வேட்டை! ராமாயணா படத்திற்காக 13 வாய்ப்புகளை உதறித்தள்ளிய இசைப்புயல்!

ராவண தாண்டவம் பாடலுக்காக 13 வெர்ஷன்கள்; அனிருத், ஜி.வி.பிரகாஷ் கூட்டணியின் வெற்றி ரகசியம்!
Ar rahman interview
Ar Rahman Interview DD News
ராஜமருதவேல்

வி.ராஜமருதவேல், பொறியியல் பட்டதாரி; வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் பணிபுரிகிறார். கல்கி ஆன்லைனில் ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, சுற்றுச்சூழல், கலை-கலாச்சாரம், சினிமா ஆகிய பிரிவுகளில் எழுதி வருகிறார்.

Updated on: 

கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ஏ.ஆர். ரஹ்மானின் நீண்ட கால நண்பரான பரத் பாலா இயக்கிய 'பனாரஸ்' திரைப்படத்தின் திரையிடல் நடைபெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் , பேசிய இசைப்புயல் ஏ. ஆர்.ரஹ்மான் தான் ஒரு திரைப்படத்திற்காக 13 திரைப்பட வாய்ப்புகளை நிராகரித்து பற்றி பெருமையுடன் குறிப்பிட்டார்.

ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசைப் பயணத்தில் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்காக உழைத்த போது, தனக்கு கிடைத்த பல வாய்ப்புகளை மறுத்து உள்ளார். இது அவர் எடுத்துக்கொண்ட ஒரு திரைப்படத்தின் வாய்ப்பினை எந்த அளவிற்கு ஈடுபாட்டுடன் செய்து முடித்துள்ளார் என்பதை காட்டுகிறது. சமீபத்தில் வெளிவந்த மிகப்பிரம்மாண்டான காவியமான ராமாயணா திரைப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் சிம்மர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுவரை ராமாயணா - பாகம்1 1700 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் இந்த திரைப்படம் சீனா , ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளிலும் வெளியாக உள்ளதால், இது இந்தியாவிலேயே அதிக வசூல் செய்த திரைப்படமாக முதல் இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஏ ஆர்.ரஹ்மான் , தான் ராமாயணம் திரைப்படத்திற்கு, ஹாலிவுட் இசை அமைப்பாளர் ஹான்ஸ் சிம்மருடன் இணைந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தேன். இந்த திரைப்படத்தில் பணியாற்றுவதற்காக பல முக்கிய இயக்குனர்களின் திரைப்படங்களில் பணியாற்றும் வாய்ப்பினை நிராகரித்ததாக கூறியுள்ளார். இந்த குறிப்பிட்ட காலத்தில் ரஹ்மான் 12 திரைப்பட வாய்ப்புகளை தவிர்த்து உள்ளார்.

பிரம்மாண்டமான இராமாயணா திரைப்படத்தில் தான் முழுமையாக பணிபுரிய விரும்பியதால் மற்ற வாய்ப்புகளை தவிர்த்தேன் , இதற்காக நான் பெருமைப்படுகிறேன். நான் எனது வேலையை ரசித்து செய்கிறேன் என்று நினைக்கிறேன். நான் ஒரு திட்டத்தை தொடங்கி , அதை உண்மையாக விரும்பி ரசித்து செய்யும்போது மட்டுமே என்னால் ஏற்றுக்கொள்ள முடியும். அது எனது இசை உணர்வை வளர்க்கிறது. அதனால், எனது குழுவினரும் உற்சாகமாக பணிபுரிகின்றனர்.

Humble Life
AR RahmanIntel

இந்த திரைப்படத்தில் வரும் ராவண தாண்டவத்திற்கு மட்டும் பலமுறை இசையமைத்து பார்த்து வடிவம் கொடுத்துள்ளோம். ஒவ்வொரு பாடல்களுக்கும் பலவிதமாக இசையமைத்து , அதில் உள்ள கருப்பொருட்களை மீண்டும் மீண்டும் திருத்தி இசையமைத்துள்ளோம். உண்மையில் ராவண தாண்டவம் பாடலுக்கு மட்டும் 12 அல்லது 13 வெவ்வேறு விதமான இசைப் பதிப்புகளை உருவாக்கி இருந்தோம். இறுதியில் நாங்கள் ஒரு பதிப்பை தேர்ந்தெடுத்து அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும் என்று வெளியிட்டோம், என்று ரஹ்மான் கூறினோம்.

ராமாயண திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் பாடல்கள் வெளிவந்த போது கலவையான விமர்சனங்கள் எழுந்தது. ராவண தாண்டவம் பாடலை இசை அமைப்பாளர்கள் அனிருத் மற்றும் ஜிவி பிரகாஷ் இணைந்து பாடியிருந்தனர். இந்த திரைப்படத்தின் சில பாடல்களில் இஸ்லாமிய இசையின் தாக்கம் இருந்ததாக எதிர்ப்புகளும் கிளம்பியிருந்தது. ஆயினும் படம் வெளிவந்த பிறகு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. படத்தின் ஆடியோ உரிமை ₹75 கோடிக்கு விற்பனையாகி சாதனை செய்துள்ளது. படத்தின் முக்கிய பலமாக பாடல்களையும் பின்னணி இசையையும் பலரும் குறிப்பிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.