ராமாயணம் படம் பார்த்து மிரண்ட ராஜமௌலி! 'வாரணாசி' காட்சிகளை மாற்ற திட்டம்?

ரன்பீர் கபூர் - யாஷ் நடித்த ராமாயணம் திரைப்படத்தைப் பாராட்டிய ராஜமௌலிக்கு புதிய சிக்கல்!
rajamauli
Rajamauli RamayanaBrittanica
ராஜமருதவேல்

வி.ராஜமருதவேல், பொறியியல் பட்டதாரி; வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் பணிபுரிகிறார். கல்கி ஆன்லைனில் ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, சுற்றுச்சூழல், கலை-கலாச்சாரம், சினிமா ஆகிய பிரிவுகளில் எழுதி வருகிறார்.

Updated on: 

அதிக எதிர்பார்ப்புகளை கொண்ட இராமாயணம் திரைப்படம் இன்று பல்வேறு மொழிகளில் , உலகமெங்கும் வெளியாகி பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. நித்திஷ் திவாரி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் ரன்பீர் கபூர், யாஷ் , சாய் பல்லவி , சன்னி தியோல் , விவேக் ஓபராய் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மர் ஆகியோர் முதல் முறையாக இணைந்து இசையமைத்திருந்தனர். இதனால் , படத்திற்கு சர்வதேச அளவில் நல்ல மதிப்பு கிடைத்துள்ளது.

இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும்பாலும் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகின்றனர். நடிப்பு , காட்சியமைப்பின் பிரம்மாண்டம் , அதி நவீன கிராபிக்ஸ் , நவீன தொழில்நுட்பத்தில் ஆடியோ போன்ற மேம்பட்ட அம்சங்களினால் அதிகம் கவரப்பட்டுள்ளனர். பெரும்பாலான விமர்சகர்கள் படத்தின் பிரம்மாண்டக் காட்சிகளை மலைக்க வைப்பதாக கூறியுள்ளனர். படத்தின் முக்கிய பலமாக பாடல்களும் , பின்னணி இசையும் இருப்பதாக கூறி பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில் , இந்த திரைப்படத்தினை பிரம்மாண்ட இயக்குனர் எஸ் எஸ்.ராஜமௌலி , அட்லீ உள்ளிட்ட பல இயக்குனர்களும் முதல் நாளே பார்த்துவிட்டு படத்திற்கு ஆதரவாக விமர்சனமும் செய்துள்ளனர். குறிப்பாக ராஜமவுலி சமீபத்திய காலமாக இந்தியாவிலேயே அதிக பட்ஜெட் திரைப்படங்களை எடுத்து , அதிக வசூல் செய்யும் சாதனை மிக்க திரைப்படங்களாக வெளியிடுவது அவரது வாடிக்கை. அதனால் , அவரது கருத்துக்கள் தற்போது விமர்சகர்களால் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன.

இந்தப் படத்தினை பார்த்த பின் ராஜமெளலி , " பிரம்மாண்டமான இந்த காவியத்தை பிரமாண்டமான திரையில் மட்டுமே பார்க்க முடியும். வனவாசத்தில் இருக்கும் காட்சிகளில் ராமராக நடித்த ரன்பீர் கபூரிடம் ஒரு தெய்வீகத்தன்மை இருந்தது படத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றது. நடிகர் யாஷ் ஒவ்வொரு கட்சியிலும் ராவணனாகவே வாழ்ந்துள்ளார் , சீதா தேவியாக சாய்பல்லவியின் கிரேஸ் அற்புதம் .ப்ரீ கிளைமேக்ஸ் மற்றும் கிளமேக்ஸ் காட்சி எல்லாம் படத்திற்கு பலமாக இருக்கிறது.

இயக்குநர் நித்திஷ் திவாரிக்கும் தயாரிப்பாளர் நமித் மல்கோத்ராவுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்," என்று பதிவிட்டுள்ளார்.

Ramayana movie 2026 ராமாயணா திரைப்படம்
Ramayana movie 2026 ராமாயணா திரைப்படம் AI Image

ஒரு பக்கம் ராஜமவுலி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தாலும் , மறுபக்கம் தான் இயக்கி வரும் 'வாரணாசி' திரைப்படத்திற்கும் இடையில் உள்ள ஒற்றுமைகளை கூர்ந்து கவனித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கும் வாரணாசி திரைப்படத்தின் சில காட்சிகள் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இரு திரைப்படங்களில் உள்ள கதாபாத்திரங்கள் , உடைகள் , காட்சியமைப்புகள் , ஒரே மாதிரியான பின்னணிகள் ஏதேனும் உள்ளதா? என்றும் ஆராய்ந்து வருகின்றனர். வராணாசி திரைப்படம் முன்கூட்டியே தொடங்கப்பட்டாலும், இராமாயணம் திரைப்படம் விரைவாகவே எடுக்கப்பட்டு திரையரங்குகளில் வெளியாகி விட்டது. சில இடங்களில் ஏதேனும் காட்சி ஒற்றுமைகள் இருந்தால் , அது படத்தின் தரத்தினை பாதிக்கும் என்றும் தன் பெயருக்கு களங்கம் ஏற்படும் என்றும் ராஜமவுலி கவலைக் கொண்டுள்ளார்.

ராஜமவுலிக்கு உலகமெங்கிலும் ரசிகர் கூட்டம் இருப்பதால் , அவரது தனித்தன்மையை பாதுகாக்க விரும்புகிறார். அதனால் , சில காட்சிகளில் சிறிது ஒற்றுமை இருந்தாலும் அதை முற்றிலும் நீக்கி விட்டு , வேறு காட்சிகளை சேர்க்கலாம் என்றும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.