RRR படத்திற்குப் பிறகு ராஜமௌலியின் அடுத்தப் படத்தின் அப்டேட் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இணையத்தில் கசிந்தது. #SSMB29 என்ற அழைக்கப்படும் இந்தப் படத்தின் அப்டேட்டை ராஜமௌலியே கூறியதால் அதிகாரப்பூர்வமானது.
ராஜமௌலி 2001ம் ஆண்டு ஸ்டூடன்ட் நம்பர் 1 என்றப் படத்தின் மூலம் அறிமுகமாகி 2009ம் ஆண்டு வெளியான மகதீரா படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அதன்பின்னர் 2015 மற்றும் 2017ம் ஆண்டுகளில் வெளியான பாகுபலி படங்கள் பிரம்மாண்டத்தின் உச்சமாக வெளியாகின.
அதேபோல் அடுத்த ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR படமும் அவதார் படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேம்ரான் வரைப் பெயர் பெற்றது. இதனையடுத்து இவருடைய அடுத்தப் படத்திற்கான அப்டேட் எப்போது வரும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தவகையில் பிப்ரவரி மாதம் இறுதியில் தனது அடுத்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கின்றது என்றுப் பேச்சு வாக்கில் கூறினார்.
பெயரிடப்படாத அந்தப் படம் #SSMB26 என்றழைக்கப்படுகிறது. இப்படத்தில் ஹீரோவைத் தவிர எந்த நடிகை நடிகர்களையும் தேர்ந்தெடுக்கவில்லை. ராஜமௌலியின் அடுத்தப் படத்தில் கைக்கோர்க்கும் நடிகர் தெலுங்கு ஸ்டார் மகேஷ் பாபு ஆவார். ஆகையால் தான் எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபு ஆகியோரின் பெயர்களை இணைத்து #SSMB26 என்று அழைக்கப்படுகிறது.
இதுத்தொடர்பாக அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். இப்படத்திற்கான முழு ஸ்க்ரிப்ட் வேலைகளும் முடிந்துவிட்டது. தற்போது ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே சொன்னதுபோல் படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் மகேஷ் பாபு மட்டும்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்னும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்ந்தெடுக்கவில்லை. இன்னும் சில காலங்களில் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாகிவிடும். அதேபோல் சீக்கிரமாக முடிக்கவே முயற்சி செய்கிறோம். விரைவில் திரைக்குமுன் மகேஷ் பாபுவை அறிமுகப்படுத்துகிறோம்.
மேலும் இப்படத்தின் ஸ்கிரிப்ட் வேலை விஜயெந்திர பிரசாத் உதவியுடன் நகர்ந்தது. அதேபோல் RRR படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவேனி இசையமைக்கவுள்ளார். துர்கா ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கப்போகும் இந்தப்படம் 1000 கோடி பட்ஜட்டில் உருவாகப் போகிறது. இது ஒரு அட்வென்ச்சர் படமாக இருக்கும் என்று எதிர்பாரக்கப்படுகிறது. ராஜமௌலியிடமிருந்து மற்றொரு பிரம்மாண்ட உலகப் படம் கிடைக்கப்போகிறது என்பதில் சந்தேகமேயில்லை.