திருப்பதியில் ரஜினி மகள்கள் சாமி தரிசனம்... வைரலாகும் போட்டோஸ்!

Superstar Rajini daughters
Superstar Rajini daughters

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், செளந்தர்யா ரஜினிகாந்த் இருவரும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்.

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்களும் கூட அடிக்கடி வந்து செல்வார்கள். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தின் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவரும் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். செளந்தர்யா தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடனும் வந்திருந்தார்.

விஐபி தரிசனத்தின் மூலம் அவர்கள் ஏழுமலையானின் சேவையில் பங்கேற்று வழிபாடு நடத்தினர். தரிசனம் முடிந்ததும், ஆலய ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேதசிர்வசனம் செய்தனர். பின்பு கோயில் அதிகாரிகள் அவர்களுக்கு ஸ்ரீவாரி தீர்த்தப்பிரசாதம் வழங்கி, பட்டு வஸ்திரம் அணிவித்து மரியாதை செய்தனர். இரண்டு பேருக்கும் தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். தரிசனம் முடித்து வெளியே வந்ததும் அங்கு ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துவிட்டு புறப்பட்டனர்.

இதையும் படியுங்கள்:
ஆபரேஷன் முடிந்து வீடு திரும்பிய அஜித் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? வைரலாகும் வீடியோ!
Superstar Rajini daughters

ஐஸ்வர்யாவைத் தொடர்ந்து செளந்தர்யாவும் இப்போது மீண்டும் இயக்கத்திற்கு திரும்ப இருக்கிறார். கிரிக்கெட்டர் கங்குலியின் பயோபிக்கை அவர் இயக்க இருக்கிறார் எனவும் இதில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com