நாட்டாமை படத்தில் ரஜினி நடித்திருக்கிறார்… இது எத்தனை பேருக்கு தெரியும்?
சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டாமை படம் பெரிய அளவில் ரசிகர்களைப் பெற்றது. இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார் என்று சொன்னால் நம்புவீர்களா?
பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பல ஹிட் படங்களைக் கொடுத்தாலும், யாராலும் மறக்கமுடியாத ஒரு படம் நாட்டாமை. 'நாட்டாமை கால வச்சா' என்று பாடலைக் கேட்டால், தமிழக மக்களுக்கு ஒரு புத்துணர்வு கிடைக்கும். குஷ்பு, மீனா என முன்னணி நடிகைகள் நடித்த இப்படத்தின் க்ளைமக்ஸ் காட்சிகளுக்கு அவ்வளவு ரசிகர்கள் உள்ளார்கள். இப்படம் ரிலீஸ் ஆனவுடன் தமிழகம் எங்கும் மூலை முடுக்குகளிலெல்லாம் ஓடியது.
அதேபோல் இன்றுவரை, தொலைக்காட்சியில் எப்போது போட்டாலும், புதிதாக பார்ப்பது போல பார்க்கும் ரசிகர்கள் பட்டாளம் மிக அதிகம்.
இந்த நாட்டாமை படத்தின் கதை முதலில் மம்முட்டியிடமே கூறப்பட்டது. ஆனால், அவர் வேறு ஒரு படத்தில் பிஸியாக இருந்ததால், நடிக்கவில்லை. அதன்பின்னர் இயக்குநர் மற்றும் நடிகருமான பார்த்திபனிடம் கதை கூறப்பட்டது. அவரும் அதே கதையைக் கூறியதால், வேறு ஒரு நடிகரிடம் கதை சொல்லப்பட்டது. அவர்தான் சரத்குமார். ஒருவழியாக சரத்குமார் அப்படத்தில் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டார். பின்னர் இப்படம் 1994ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
தமிழில் நன்றாக ஓடிய ஒரு மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படம் என்பதால், தெலுங்கிலும் உருவாக்க திட்டமிடப்பட்டது. சரத்குமாருக்கு பதிலாக மோகன்பாபு நடித்தார். இப்படம் பெத்தராயுடு என்ற பெயரில் 1995ம் ஆண்டு வெளியானது.
இந்தப் படத்தில்தான் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். ஆம்! சரத்குமார் கதாபாத்திரத்தின் அப்பா கதாபாத்திரத்தில்தான் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். தமிழில் அந்த கதாபாத்திரத்தில் விஜயகுமார் நடித்தது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்தின் மிரட்டலான மற்றும் தனித்துவமான லுக் வழக்கம்போல் அவ்வளவு மாஸாக உள்ளது. இந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்தது மட்டுமல்ல, தெலுங்கில் நாட்டாமை படம் வந்தது கூட பல பேருக்குத் தெரியாது. இன்னும் என்னென்ன முக்கிய விஷயங்கள் நமக்கு தெரியாமல் உள்ளனவோ?