இதை நிரூபிக்கத்தான் ரன்பீர் கபூர் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிப்பதில்லை – கங்கனா!

Kangana Ranaut
Kangana Ranaut
Published on

முன்னணி நடிகையான கங்கனா ரனாவத், தான் இந்த விஷயத்தை நிரூபிக்கத்தான் ஷாருக்கான், ரன்பீர் கபூர், அக்ஷய் குமார் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிப்பதில்லை என்று பேசியிருக்கிறார்.

இந்திய முன்னணி நடிகரான கங்கனா ரனாவத் தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்தூம் படத்தில் நடித்தார். சமீபத்தில்கூட இவர் நடித்த சந்திரமுகி படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும், சந்திரமுகி கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் பல ஸ்ட்ராங்கான கதாபாத்திரங்களில் நடித்து பல விருதுகளை வென்றவர். தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஜான்சி ராணி போன்ற பல பயோபிக் படங்களில் நடித்தார்.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே அதிகம் நடித்து வருகிறார்.

இவர் நடிகையாக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். சினிமா துறையில்  நான்கு தேசிய திரைப்பட விருதுகள், ஐந்து பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றவர் கங்கனா.

சினிமா துறையில் வெற்றி கண்ட கங்கனா அரசியலிலும் நுழைந்தார். தற்போது இவர் எம்பியாக இருந்து வருகிறார். சினிமாவில் இருந்தபோதே, வெளிப்படையாக கருத்துக்களை கூறி வருபவர் இவர். இந்தநிலையில் அரசியலில் நுழைந்தவுடன் இன்னும் அதிகமாகவே தன்னுடைய கருத்தை தைரியமாக முன்வைத்து பேசி வருகிறார்.

அந்தவகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தொகுப்பாளர், "நீங்கள் ரன்பீர் கபூர், அக்ஷய் குமார் மற்றும் கான்கள் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க  மறுப்பது ஏன்?" என்று கேட்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
"தமிழ் ரசிகர்கள் எப்பவும் கெத்து தான்" - பாராட்டும் தெலுங்கு நடிகர்!
Kangana Ranaut

அதற்கு கங்கனா, “எனக்கு ரன்பீர் கபூர், அக்ஷய் குமார், ஷாருக்கான், அமீர்கான் ஆகியோரை மிகவும் பிடிக்கும். ஆனால், அவர்களுடைய படங்களில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இருக்காது. அப்போது நான் அவர்களுடன் நடித்தால், எனக்கு முக்கியத்துவம் இருக்காது. ஒரு படத்தில் ஹீரோவால் தான் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ளது என்பது முற்றிலும் பொய். அதை நிரூபிக்கவே நான் இவர்கள் படங்களில் நடிக்க மறுத்து விட்டேன்.” என்று பேசினார்.

அதுவும் சரிதான், ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிகர்கள் நடிக்கும்போது, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிகைகள் நடிக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லையே. அதைவிட மேலாக, ஒருவரின் தனிப்பட்ட கருத்துகளுக்கும், முடிவுகளுக்கும் மரியாதை கொடுப்பது தவறே இல்லை…

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com