‘சில்லுனு ஒரு காதல் 2’… ஹீரோ யார் தெரியுமா?

Sillunu oru Kadhal
Sillunu oru Kadhal

சூர்யா ஜோதிகா நடிப்பில் கிருஷ்ணாவின் இயக்கத்தில், கடந்த 2006ம் ஆண்டு 'சில்லுனு ஒரு காதல்' படம் வெளியானது. அந்தவகையில் இப்படத்தின் 2ம் பாகத்தைப் பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வந்துள்ளன.

சில்லுனு ஒரு காதல் படம் கோலிவுட்டில் என்றென்றும் யாராலும் மறக்க முடியாத ஒரு படமாகவே இருந்து வருகிறது. அனைத்துக் காலக்கட்டத்திலும் நின்று பேசும் ஒரு லவ் மெலோடியானப் படம். குறிப்பாக படத்தின் ஹீரோ ஹீரோயினாக சூர்யா ஜோதிகா நடித்ததுதான் படத்தின் ஹைலைட். திரை வாழ்க்கையிலும், நிஜ வாழ்க்கையிலும் பலருக்கும் பிடித்தமான ஜோடி என்றால், அது சூர்யா ஜோதிகா ஜோடிதான்.

ஜோதிகாவின் கதாப்பாத்திரமான குந்தவை, பல பெண்களுக்குப் பிடித்தமான கதாப்பாத்திரம் ஆகும். கவுதம் குந்தவி ஜோடி பாதி படத்தின் பலம் என்றால், மீதி படத்தின் பலம் கவுதம் ஐஷு ஜோடியாகும். அப்படத்தின் அனைத்து பாடல்களும் இன்றும் பலரின் இரவை சொர்க்கமயமாக்கி வருகின்றன. இதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மேஜிக்கே காரணம் ஏன்றும் கூறலாம். அதே 2006ம் ஆண்டுதான் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் திருமணம் செய்துக்கொண்டனர்.

இந்நிலையில் இப்படத்தை இயக்கிய கிருஷ்ணா, அதன் பிறகு நெடுஞ்சாலை மற்றும் பத்து தல ஆகிய படங்களை இயக்கினார். அதைத்தொடர்ந்து தற்போது சில்லுனு ஒரு காதல் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார் கிருஷ்ணா. இப்படத்தில் கவின் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கவின் நடித்த டாடா படம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பைப்பெற்றது. இதனையடுத்து கவின் நடிக்கும் படங்களுக்கு எதிர்பார்ப்புகள் கூடின. அந்தவகையில் சென்ற ஆண்டே Kavin’s next என்று கவினுடைய அடுத்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து படத்திற்கு ஸ்டார் என்று பெயர் வைக்கப்பட்டதாகப் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இப்படம் சென்ற மாதம் வெளியானது. அதேபோல் நெல்சன் தயாரிப்பில் Bloody Begger என்ற படத்தில் நடிக்கவுள்ளார் கவின்.

இதையும் படியுங்கள்:
முடிவுக்கு வரும் எதிர்நீச்சல் சீரியல்... ரசிகர்கள் அதிர்ச்சி!
Sillunu oru Kadhal

ஸ்டார் படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றாலும், கவினின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது. ஆகையால், அவருக்குத் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்துக்கொண்டே இருக்கின்றன. அந்தவகையில் சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யாவின் கதாப்பாத்திரத்தில் கவின் நடிக்கவுள்ளார் என்பது அதிகாரப்பூர்வமானது என்றால், ரசிகர்களின் குஷிக்கு அளவே இருக்காது என்பது மட்டும் உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com