

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பாக திரண்ட தனது ரசிகர்களை நோக்கிக் கையசைத்து, அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உற்சாகப்படுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்.
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு மற்றும் அவரது பிறந்தநாள் தினத்தன்று ரஜினி வீட்டின் முன்பாக ரசிகர்கள் கூடுவது வழக்கம். அப்போது, தனது ரசிகர்களைப் பார்த்து நன்றி கூறிவிட்டுச் செல்வார்.இந்நிலையில் இன்றும் அவரது வீட்டின் முன்பாக ரசிகர்கள் குவிந்தனர். இதனைக் கண்ட ரஜினிகாந்த், வீட்டு வாசலுக்கு வந்து தனது ரசிகர்களைப் பார்த்து கையசைத்து புத்தாண்டு வாழ்த்து கூறினார்.மேலும் ரசிகர்களின் அன்புக்கு நன்றி என தெரிவித்துவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார்.
மேலும் நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்.. தான் நடித்த முத்து படத்தில் இடம்பெற்றிருந்த வசனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், மீனா, "போற ரூட்டு கரெக்ட்டுதானே!" என கேட்பார். அதற்கு ரஜினி, "யாருக்கு தெரியும்? நான் எப்பவுமே போற ரூட்டை பற்றி கவலைப்படுறதே கிடையாது. ஆண்டவன் மேல பாரத்தை போட்டுவிட்டு வண்டி எந்த ரூட்டில் போகிறதோ, அந்த ரூட்டில் "சிவா" என சொல்லிவிட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான்! என அவர் பதிவிட்டுள்ளார்.