மிஸ் பண்ணிடாதீங்க..! சன் டிவியில் ரஜினியின் பிரத்யேக பேட்டி.! அக்டோபர் 11-ல் ஒளிபரப்பாகிறது..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் 2 பட பிரத்யேக நேர்காணல் குறித்த சுவாரசியமான தகவல்கள் மற்றும் ஒளிபரப்பு விவரங்கள்.
rajini interview
Rajini interview DD
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

ஜெயிலர் - 2 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உலகம் முழுக்க வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தின் பாடல்களும் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தைப் பெற்றுள்ளன. இந்த திரைப்படத்தின் விளம்பரத்தை அதிகப்படுத்தும் வகையிலும் தனது ரசிகர்களை கவரும் வகையிலும் ரஜினிகாந்த் நேர்காணல் ஒன்றை தந்துள்ளார், என்பது தான் தமிழ் சினிமாவின் டாக் ஆப் தி டவுனாக உள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் ரசிகர்கள் சோர்வில் உள்ளனர். அவர்களை உற்சாகப் படுத்தும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2 திரைப்படம் உலகமெங்கும் ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது.50 ஆண்டுகளைக் கடந்தும் சூப்பர் ஸ்டாராக உச்சத்தில் ரஜினி காந்த் இருக்கிறார். மேலும் தமிழ் சினிமாவில் 500 கோடி ரூபாய் மார்க்கெட்டை கொண்ட ஒரே நடிகராகவும் உள்ளார்.

தமிழ் சினிமாவின் மற்ற உச்ச நட்சத்திரங்களான விஜய் , அஜித் , கமல் உள்ளிட்டோர் தற்போது சினிமாவில் உடனடியாக கவனம் செலுத்தாத நிலையில் , ரஜினியின் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் , சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய் வசூலைக் குவித்து பிளாக்பஸ்டர் வெற்றியையும் பெற்றது.

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியின் காரணமாக அதன் இரண்டாம் பாகத்தை அதிக பொருட் செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தை பெரிய வெற்றித் திரைப்படமாக்க வேண்டும் என்று ரஜினியும் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் தீர்மானமாக உள்ளனர். இந்த திரைப்படத்தின் முந்தைய பாகத்தில் நடித்த பல நடிகர்களும் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளனர்.

ஜெயிலர் முதல் பாகத்தில் கேமியோ ரோலில் வந்து ரசிகர்களை மகிழ்வித்த மோகன்லால் , சிவராஜ் குமார் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் உள்ளனர். அதே நேரம் ஹிருத்திக் ரோஷன் , விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ள காட்சிகள் எதுவும் முன்னோட்டத்தில் காட்டப்படவில்லை. படம் முழுக்க பாலிவுட் , சாண்டல்வுட், மல்லுவுட் , டோலிவுட் , கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கேமியோ ரோலில் வருகின்றனர்.

Jailer 2
Jailer 2sun pictures

ரஜினியின், 'ஆல் இந்தியா பர்மிட்' பார்முலா படி இந்தியாவின் பல்வேறு மொழி நடிகர்களை நடிக்க வைப்பதால் , அந்த மொழியில் திரைப்படங்களை விற்பனை செய்வது எளிது என்று நினைக்கிறார். சமீபத்தில் வெளியான 'ஜெயிலர் 2' படத்தின் டிரைலர் இணையத்தில் அதிக பார்வைகளைப் பெற்று வருகிறது.

தற்போது ஊடகங்களில் வெளியான தகவலின் படி ரஜினிகாந்த் ஜெயிலர் -2 திரைப்படம் தொடர்பாக, நேர்காணல் ஒன்றை சன் டிவிக்கு அளித்துள்ளார். இந்த நேர்காணல் அக்டோபர் 11 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பட உள்ளது. ரஜினி காந்த் அரிதாகவே நேர்காணல் தருகிறார் என்பதால் , அவரது இந்த நேர்காணலுக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது.

இந்த நேர்காணலில் ரஜினி தனது படப்பிடிப்பு அனுபவங்கள், அங்கு நடைபெற்ற சுவாரசியமாக சம்பவங்கள் , படக் குழுவினரினர் திறமை ஆகியவற்றைப் பற்றி பேசுவார் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. அதே நேரம் ரஜினியின் பேச்சில் ஏதேனும் தவெக பற்றி இருக்குமா? தங்களுக்கு ஏதாவது கண்டண்ட் கிடைக்குமா? என்று மீடியாக்களும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com