ரஜினி கமல் இருவரும் படபிடிப்பு தளத்தில் சந்திக்கும் நிகழ்வு நீண்ட வருடங்களுக்கு பிறகு நடந்துள்ளது.
கமல்ஹாசனின் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், இந்தியன் 2 படப்பிடிப்பும் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் த செ ஞானவேல் இயக்கத்தில் உருவாகும், தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் வெவ்வேறு தளத்தில் நடைபெற்றது.
அப்போது, கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு நடப்பதை அறிந்த ரஜினிகாந்த், இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று கமல்ஹாசனைச் சந்திக்க வருவதாகத் தெரிவித்துள்ளார். இதனையறிந்த கமல்ஹாசன் “என் நண்பனைச் சந்திக்க நானே வருகிறேன்” என காலை 8 மணிக்கே தலைவர் 170 ஷீட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்து, சூப்பர்ஸ்டாருக்கு சர்ப்ரைஸ் தந்துள்ளார்.
கமல்ஹாசனைக் கண்ட ரஜினிகாந்த் மகிழ்ச்சியில், அவரை கட்டித்தழுவிக் கொண்டார். இருவரும் தங்கள் அன்பைப் பரிமாறிக்கொண்டனர்.
இந்தியத் திரையுலகின் மாபெரும் உச்ச நட்சத்திரங்களின் இந்த நட்பும், அவர்களுக்கிடையேயான அன்பும், படப்பிடிப்பில் இருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக பாபா, பஞ்சதந்திரம் படங்கள் இதே இடத்தில் ஷீட்டிங் நடைபெற்ற போது, இருவரும் சந்தித்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இருவரும் ஒரே படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பு இந்த படகுழுவினர்க்கு மட்டுமன்றி ரஜினி கமல் இருவரின் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான விஷயமாக மாறி வருகிறது.