

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இந்தப் படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கியிருப்பதாக படக்குழு புதிய வீடியோ மூலம் அறிவித்துள்ளது.
ரஜினிகாந்தின் 173-வது படமான ‘தர்மன்’ தொடக்கத்திலிருந்தே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டபோது வெளியான முதல் பார்வை போஸ்டரில், ரஜினிகாந்த் மருத்துவர் தோற்றத்தில் காணப்பட்டார். இதனால் படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பு உருவானது. ‘The Deadly Doctor’ என்ற வாசகமும் ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பியது.
தற்போது வெளியாகியுள்ள 2-ம் கட்ட படப்பிடிப்பு அறிவிப்பு வீடியோவில், ரஜினிகாந்த் இதுவரை பார்த்திராத வகையில் ஸ்டைலான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். கருப்பு சட்டை, கூலிங் கிளாஸ், காதில் இயர்போன் மற்றும் கையில் வேல் போன்ற பிரேஸ்லெட் என அவரது புதிய தோற்றம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. குறிப்பாக, இந்த தோற்றம் படத்தின் கதாபாத்திரம் குறித்த புதிய யூகங்களை உருவாக்கியுள்ளது.
‘தர்மன்’ படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ போன்ற படங்களின் மூலம் தனக்கென ஒரு பாணியை உருவாக்கியுள்ள அவர், ரஜினிகாந்தை எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் காண்பிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்தப் படம் குடும்ப உணர்வுகளுடன் கூடிய த்ரில்லர் கதையாக இருக்கும் என்று அஸ்வத் முன்பு கூறியிருந்தார்.
மேலும், ‘படையப்பா’ மற்றும் ‘வேட்டையாடு விளையாடு’ படங்களின் அம்சங்கள் கலந்த ஒரு அனுபவமாக இது இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கமல்ஹாசனின் தயாரிப்பு, ரஜினிகாந்தின் நடிப்பு, அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கம் என வலுவான கூட்டணி அமைந்துள்ள ‘தர்மன்’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
சிம்ரன், ராஷி கண்ணா, ருக்மிணி வசந்த் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இந்தப் படத்தின் பயணம் தொடங்குவதற்கும் முன்பே பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. முதலில் வேறு இயக்குநர்களின் பெயர்கள் பேசப்பட்ட நிலையில், இறுதியாக அஸ்வத் மாரிமுத்து இயக்குநராக உறுதி செய்யப்பட்டார். படத்தின் அறிவிப்பு நிகழ்விலேயே ரஜினிகாந்த், இந்தக் கூட்டணி மீது நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
தயாரிப்பாளர் கமல்ஹாசனும், ரஜினிகாந்துடன் இணைந்து ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்ற நீண்ட நாள் எண்ணம் ‘தர்மன்’ மூலம் நிறைவேறுவதாகக் கூறியிருந்தார்.படம் மருத்துவரை மையமாகக் கொண்டதாகத் தகவல்கள் வெளியானதால், இது பிரபல வெளிநாட்டு தொடரின் தழுவல் என்ற தகவலும் சமூக வலைதளங்களில் பரவியது.
ஆனால் அந்த தகவலை அஸ்வத் மாரிமுத்து திட்டவட்டமாக மறுத்து, அது போலியான செய்தி என்று தெரிவித்திருந்தார். இதனால் ‘தர்மன்’ ஒரு புதிய கதைக்களத்தைக் கொண்ட படமாக இருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
முதல் கட்ட படப்பிடிப்பில் பாடல் மற்றும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியிருப்பது படத்தின் தயாரிப்பு பணிகள் வேகத்தில் சென்று கொண்டிருப்பதைக் காட்டுகிறது. ஒவ்வொரு போஸ்டர் அல்லது வீடியோ வெளியானாலும், ரஜினிகாந்தின் கதாபாத்திரம் குறித்த ஆர்வம் அதிகரித்து வருகிறது.
படத்தின் முதல் பார்வையில் ரஜினிகாந்த் மருத்துவர் தோற்றத்தில் கையில் ரத்தம் படிந்த அறுவைச் சிகிச்சைக் கருவியுடன் காணப்பட்டதால் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. இயக்குநர் இதை குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான த்ரில்லர் கதை என்று குறிப்பிட்டு உள்ளார்..
மேலும் ஆகஸ்ட் 13 இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் ரஜினிகாந்த் கையில் வேல் போன்ற அணிகலன் அணிந்திருப்பது ரசிகர்களிடையே புதிய ஆவலை ஏற்படுத்தி உள்ளது.படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் நிலையில், 2-ம் கட்ட படப்பிடிப்பு குறித்த இந்த புதிய அறிவிப்பு ‘தர்மன்’ மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.தர்மன் படத்தின் கதை ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில் ரஜினிகாந்தின் மருத்துவர் கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ரஜினிகாந்தின் புதிய தோற்றத்தின் பின்னணி என்ன, ‘தர்மன்’ என்ற கதாபாத்திரம் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது என்பதற்கான பதிலை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.