வேட்டையன் படத்தில் நடித்து முடித்த ரஜினிகாந்த்… வைரலாகும் புகைப்படங்கள்!

Vettaiyan Rajinikanth
Vettaiyan Rajinikanth

டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் வேட்டையன் திரைப்படத்தில், ரஜினி தனது போர்ஷனை நடித்து முடித்து விட்டார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வந்தார். இதில் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகினி, ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து இந்த படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார்.

அந்தவகையில் தற்போது ரஜினி தனது போர்ஷனை வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் அவர் இளமையான லுக்கில் இருப்பது போல இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் கசிந்தன. இதனையடுத்து படத்தில் அவரது லுக் மாஸாகவும் யங்காகவும் உள்ளது என்று ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர். இந்தப் படத்தை அக்டோபர் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

இதனையடுத்து, வேட்டையன் படத்தில் ரஜினி நடித்து முடித்ததால், அடுத்து கூலி படத்தில் நடிக்கத் தொடங்குவார் என்று கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் ஹிட்டிற்குப் பிறகு ரஜினிகாந்துடன் இணைந்து படம் எடுக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனையடுத்து படத்தின் தலைப்பும் போஸ்டரும் வெளியாகின. கூலி என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தின் டைட்டில் டீசர் கடந்த ஏப்ரல் 22ம் தேதி வெளியானது.

இதையும் படியுங்கள்:
திடீரென சம்பளத்தை உயர்த்திய லோகேஷ் கனகராஜ்... எவ்வளவு தெரியுமா?
Vettaiyan Rajinikanth

இந்தப் படத்தில் பல முக்கிய பிரபலங்கள் நடிக்கவுள்ளனர் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகின. அந்தவகையில், இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாண்டி மாஸ்டர், பிரித்விராஜ் சுகுமார், திரிஷா, சோபனா போன்றோர் நடிக்கவுள்ளனர். இந்தப் படம் LCU வில் சேராது என்று அரசல் புரசலாக லோகியே கூறினார். ஆனாலும் இது லோகேஷும் ரஜினியும் இணைந்து உருவாக்கும் படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

மேலும் 80s ஹீரோ மோகன்தான் ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளார். ரஜினியும் மோகனும் இதற்கு முன்னர் ஒருமுறை 1985ல் வெளியான ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் இணைந்து நடித்தனர். அந்தவகையில் தற்போது மீண்டும் 39 வருடங்களுக்குப் பிறகு இணையவுள்ளது உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. கூலி படத்தின் ரஜினி லுக் டீசரிலேயே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com