பூஜையுடன் ஆரம்பமான RC16…ட்ரெண்டிங்கில் பூஜை க்ளிக்ஸ்!

RC16
RC16

கேம் சேஞ்சர் படத்தையடுத்து ராம் சரணின் 16வது படமான RC16 படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதனையடுத்து பூஜை வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ராம் சரண் நடித்து கடைசியாக வெளியான RRR திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பைப்பெற்றது. அதன் மாபெரும் வெற்றியை அடுத்து ராம், சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் இரண்டு கதாப்பாத்திரங்களில் ராம் சரண் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது. இன்னும் ஒரு மாத காலப் படப்பிடிப்பு வேலைகள் உள்ளன. இதனையடுத்து அவரின் 16 வது படத்தின் அப்டேட் ஏற்கனவே வெளியானது. உப்பென்னா படத்தின் இயக்குனர் புஜ்ஜி பாபு சனா தான் ராம் சரணின் அடுத்தப் படத்தை இயக்கவுள்ளார்.

இதில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் தெலுங்கில் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். மேலும் இந்தப் படத்தில் தற்போது தமிழ் சினிமாவில் கேமியோ ரோல் மூலம் பிரபலமடைந்து வரும் சிவராஜ் குமார் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RC16 படம் ஒரு விளையாட்டு சம்பந்தப்பட்டப் படம் என்று சென்ற மாதம் இணையத்தில் பேசப்பட்டது. ஆனால் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதேபோல் ஜான்வி கபூருக்கு இது இரண்டாவது தெலுங்கு படமாகும். ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து தேவரா படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். ஆனால் சில காரணங்களால் இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. மேலும் இந்தப் படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதற்குள் ஜான்வி கபூர் தனது இரண்டாவது தெலுங்குப் படத்தில் இணைந்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
ஃபஹத் ஃபாசில் நடிக்கு அடுத்தடுத்த இரண்டுப் படங்கள்…பாகுபலி கூட்டணியுடன் கைக்கோர்க்கிறாரா?
RC16

இதனையடுத்து இன்று காலை RC16 படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த பூஜை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான், ராம் சரண், ஜான்வி கபூர், புச்சி பாபு, சிரஞ்சீவி ஆகியோர் கலந்துக்கொண்டனர். மேலும் தற்போது பூஜை வீடியோ மற்றும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com