₹85 கோடி சாதனை! ‘ராமாயணா’ ஆடியோ உரிமத்தால் புதிய வரலாறு படைத்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஹாலிவுட் இசை அமைப்பாளர் ஹான்ஸ் சிம்மருடன் இணைந்து இந்திய திரையுலகையே வியக்க வைத்த இசைப்புயல்
AR Rahman Ranbir Kapoor
AR Rahman Ramayana
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

இந்திய இசை உலகில் ஏராளமான சாதனைகளை செய்துள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது மேலும் ஒரு சாதனை செய்து தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளார். மிகப்பிரம்மாண்டமாக நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படம், வெளியாகும் முன்னரே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறது.

ஹிந்துக்களின் புனித காவியமான ராமாயணத்தை உலகம் முழுக்க கொண்டு செல்லும் நோக்கில் , நிதேஷ் இந்த படத்தினை பட்டை தீட்டி வருகிறார். உலகின் அதிக பொருட் செலவில் தயாராகும் 'ராமாயணா' இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளது. இதன் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும் , இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் திரையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.

இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் ராமராகவும், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான சாய் பல்லவி சீதையாகவும், கன்னடத் திரையுலகின் பான் இந்தியா நடிகர் யாஷ் ராவணனாகவும், விவேக் ஓபராய் விபீஷணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

ராமாயணத் திரைப்படத்தின் முக்கிய சிறப்பம்சமாக, படத்தின் இசைக் கூட்டணி அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ள இந்தியாவின் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் , ஹாலிவுட்டின் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மர் ஆகியோர் இணைந்து இசையமைத்து வருகின்றனர்.

இந்திய சினிமா வரலாற்றில் ஹாலிவுட் இசையமைப்பாளர் இந்திய திரைப்படத்தில் பணிபுரிவதும், ஏ.ஆர். ரஹ்மான் இன்னொரு இசையமைப்பாளருடன் இணைந்து பணிபுரிவதும் இதுவே முதல் முறை என்பதால் , படத்தின் இசைக்கும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே படத்தின் பாடல் கிளிப்கள் வெளியாகி தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. இந்திய பாரம்பரிய இசை, அழகான ஒலிகளுடன் மேற்கத்திய தரத்தில் இணைந்து சர்வதேச தரம் பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தின் டிரெய்லர், அதிநவீன விஷுவல் எஃபெக்ட்ஸ் கொண்ட பிரமிப்பூட்டும் காட்சிகளுக்கு தனது இசையால் ஏ. ஆர். ரகுமான் உயிர் கொடுத்துள்ளார். படத்தின் பிரம்மாண்டத்திற்கும் அதன் ஆன்மாவான ஆன்மீகத்தையும் உணர்வுப் பூர்வமாக ரசிகர்களுக்கு அவரது இசை கடத்துகிறது. இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய பலமாக ரஹ்மான் இசை பார்க்கப்படுகிறது.

Ar Rahman
Rahman and Hans jimmer

வெளிவந்துள்ள தகவல்களின் படி , 'ராமாயணா ' திரைப்படத்தின் ஆடியோ உரிமம் இந்தியாவிலேயே அதிக பட்சமாக , இதுவரை இல்லாத வகையில் ₹85 கோடிக்கு விற்பனையாகி சாதனை செய்துள்ளது. இதற்கு முன்னர் எந்த ஒரு திரைப்படத்தின் ஆடியோ உரிமமும் ₹30 கோடிக்கு மேல் விற்பனையானது இல்லை. ஷாருக்கான் நடித்து திரைக்கு வந்த 'ஜவான்' திரைப்படத்தின் ஆடியோ உரிமம் ₹30 கோடிக்கு விற்பனையானது தான் , இதற்கு முந்தைய சாதனையாக இருந்துள்ளது.

தற்போது ஜவான் திரைப்பட ஆடியோ உரிமத்தின் விற்பனை விலையை விட, இரு மடங்கிற்கும் மேல் 'ராமாயணா' ஆடியோ உரிமம் விற்பனையாகி உள்ளது. கிட்டதட்ட ₹85 கோடிக்கு 'ராமாயணா' ஆடியோ உரிமம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவில் பல இசையமைப்பாளர்கள் திரையுலகில் அடியெடுத்து வைத்தாலும், 30 ஆண்டுகளைக் கடந்தும் இசையுலகில் எப்போதும் ரஹ்மான் உச்சத்தில் இருக்கிறார் என்பதை ஆடியோ உரிமம் காட்டியுள்ளது

இசை மட்டுமின்றி டிஜிட்டல் உரிமையிலும் ராமாயணா திரைப்படம் அதிக விலையில் விற்பனையாகியுள்ளது. இந்த திரைப்படம் வெளியாகும் போது, திரைத்துறையில் பல உச்ச சாதனைகளைப் படைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com