நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா மந்தனா... என்னாச்சு தெரியுமா?

Rashmika Mandanna
Rashmika Mandanna

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

நடிகை ராஷ்மிகா மந்தனா பயணித்த விமனாத்தில் திடீர் தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்ட நிலையில், தான் தப்பியது குறித்து இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் டீப் பேக்கில் சிக்கினார். தொடர்ந்து தற்போது ஒரு விமானத்தில் இருந்து அவர் தப்பியது குறித்து பதிவிட்டுள்ளதால் மீண்டும் பேசப்பட்டு வருகிறார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா நேற்று மும்பையில் இருந்து ஐதராபாத்திற்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா நேற்று மும்பையில் இருந்து ஐதராபாத்திற்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். UK531 என்ற அவர் புறப்பட்ட விமானத்தில் பிரபல நடிகை ஷ்ரத்தா தாஸும் உடன் இருந்தார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.

Rashmika Mandanna
Rashmika Mandanna

இதை கவனித்த பைலட் உடனடியாக அலர்ட் ஆகி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை உடனடியாக மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கினார். இதனால் விமானத்தில் பயணித்த நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, ஷ்ரத்தா தாஸ் உள்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டபோது உயிர் தப்பித்தது எப்படி? என்பது குறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
கிட்னி கல்லை கரைக்கும் அற்புதக் காய்.. மாதம் ஒருமுறையாவது சாப்பிடுங்க! 
Rashmika Mandanna

ராஷ்மிகா மந்தனா தானும் ஸ்ரத்தா தாஸூம் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, உங்களின் தகவலுக்காக.. இப்படித்தான் நாங்கள் விமான விபத்தில் இருந்து உயிர் தப்பினோம் என ராஷ்மிகா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இது போன்று விமான விபத்தில், நடிகை சவுந்தர்யா, பிபின் ராவத் உள்ளிட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com