கிட்னி கல்லை கரைக்கும் அற்புதக் காய்.. மாதம் ஒருமுறையாவது சாப்பிடுங்க! 

Kidney stones
Kidney stones

உங்களுக்கு கிட்னியில் கல் பிரச்சினை உள்ளத? அப்படியானால் அதைக் கரைக்கும் அற்புத ஆற்றல் பீன்ஸ் காய்க்கு உண்டு. இது தவிர மேலும் பல நன்மைகளையும் பீன்ஸ் வழங்குவதால் அது பற்றிய உண்மையை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

பீன்ஸில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது உங்களது செரிமானத்துக்கு உதவி மலத்தை இலகுவாக்கும். குடலில் உள்ள நல்ல நுண்ணுயிரிக்களை வளர்த்து உணவை செரிப்பதற்கு தேவையான சத்துக்களை வழங்குகிறது. 

பீன்ஸில் உள்ள விட்டமின் கே சத்து எலும்பின் ஆரோக்கியத்துக்கு நல்லதாகும். மேலும் இதில் கால்சியம் சத்தும் இருப்பதால் எலும்பை வலுவாக்கி உறுதியடையச் செய்கிறது. பீன்ஸ் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று நோய்களிலிருந்து காக்கிறது. எனவே பச்சை பீன்ஸை சாப்பிடும்போது உடல் ஆரோக்கியமாக இருக்கும். பீன்ஸில் உள்ள விட்டமின் சி நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து சளி, இருமல் போன்றவை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். 

பீன்ஸில் கலோரி மிகவும் குறைவு. எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் பின்ஸை எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை கூடாது. அதே நேரம் பீன்ஸ் உட்கொள்வது உங்கள் பசியைக் கட்டுப்படுத்தும் என்பதால், தேவையில்லாத அதிக கலோரி நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்வது தவிர்க்கப்படுகிறது. 

கிட்னியில் கல் பிரச்சனை இருப்பவர்கள், அரை கிலோ பீன்ஸை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, ஒரு லிட்டர் தண்ணீரில் வேக வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து குடித்தால், கிட்னி கல் கரைந்துவிடும் என சொல்லப்படுகிறது. காலையில் இதை நீங்கள் எடுத்துக்கொண்டு அந்த நாள் முழுவதும் வேறு உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். உணவுகள் எதுவுமின்றி தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும். இப்படி செய்தால் கல் கரைந்து சிறுநீரில் வெளியேறிவிடும். 

இதையும் படியுங்கள்:
பீட்சா உருவான கதையை படித்துக்கொண்டே பீட்சாவை செய்து பார்க்கலாம் வாங்க!
Kidney stones

இதை முயற்சிப்பதற்கு முன்பு தகுந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று முயற்சிப்பது நல்லது. நீங்கள் எந்த வீட்டு வைத்திய முறையை முயற்சிப்பதாக இருந்தாலும் மருத்துவரிடம் ஆலோசித்துவிட்டு செய்வது அவசியமான ஒன்றாகும். 

இப்படி பீன்ஸ் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. எனவே உங்கள் உணவில் பீன்ஸை பிரதான உணவாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக கிட்னி கல் பிரச்சினை இருப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது மேலே குறிப்பிட்ட பீன்ஸ் வைத்தியத்தை முயற்சித்துப் பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com