Rashmika Mandanna
Rashmika Mandanna

திருமணம் செய்ய விரும்பும் நபரை வெளிப்படுத்திய ராஷ்மிகா மந்தனா!

Published on

'நேஷனல் கிரஷ்' என்றழைக்கப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். அனிமல் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு ஹிந்தியில் அதிகம் ரசிகர்கள் கிடைத்து இருக்கிறார்கள்.

தமிழில் சுல்தான், வாரிசு படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, இந்தியிலும் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். புஷ்பா படம் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. தற்போது புஷ்பா 2-ம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார். இதன் முதல் பாகத்தில் ஸ்ரீவள்ளியாக ரசிகர்களின் மனதை வென்ற ராஷ்மிகா, 2-ம் பாகத்திலும் ரசிகர்களை கவருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பிரபல தெலுங்கு நடிகர் விஜய்தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் காதலிப்பதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் வருகின்றன. இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. இதற்கு மறுப்பு தெரிவிக்காமல் இருவரும் அமைதி காத்து வந்தனர்.

சமீபத்தில் விஜய்தேவரகொண்டாவிடம் காதல் குறித்து பேசும்போது, "எனக்கு வயது 35. இப்போதும் நான் சிங்கிளாக இருக்கிறேன் என்று சொன்னால் நம்புவீர்களா. காதலிப்பதற்கு முன்னால் வலுவான நட்பை வளர்த்துக் கொள்ள விரும்புகிறேன்" என்றார்.

இதன் மூலம் ராஷ்மிகாவுடன் காதலில் இருப்பதை மறைமுகமாக உறுதிப்படுத்தி இருப்பதாக பேசப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு ராஷ்மிகாவும் விஜய்தேவரகொண்டாவும் ஓட்டலில் மதிய உணவு சாப்பிடும் புகைப்படம் வெளியானது.

வரவிருக்கும் புஷ்பா 2 திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வில் கலந்து கொண்ட ராஷ்மிகா மந்தனாவிடம், "நீங்கள் திரையுலகைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்வீர்களா அல்லது உங்கள் கணவர் தொழில்துறைக்கு வெளியில் இருந்து வர வேண்டுமா? எங்களுக்கு கொஞ்சம் தெளிவுபடுத்தினால், நாங்கள் யார் அந்த பையன் என்று கண்டுபிடிப்போம்" என்ற தொகுப்பாளரின் கேள்விக்கு, "அது எல்லோருக்கும் தெரியும்” என்று ரஷ்மிகாவின் பதில் சுருக்கமாகவும் இனிமையாகவும் இருந்தது. ரஷ்மிகாவின்ன் பதிலுக்கு பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர்.

இதையும் படியுங்கள்:
முன்னாள் கணவரை சீண்டிய சமந்தா! என்ன சொன்னார்?
Rashmika Mandanna

மேலும் வெளிப்படுத்துமாறு தொகுப்பாளர் கிண்டல் செய்தபோது, ​​"உங்களுக்கு என்ன பதில் வேண்டும் என்று எனக்குத் நன்றாகத் தெரியும்" என்று பதிலளித்தார். "அதை இப்போதே ஆராய வேண்டாம், தனிப்பட்ட முறையில் பிறகு சொல்கிறேன்" என்ற வார்த்தைகளால் உரையாடலை திசை திருப்பினாள்.

இதன் மூலம் விஜய்தேவரகொண்டாவுடனான காதலை ராஷ்மிகா உறுதிப்படுத்தி இருப்பதாக பலரும் பேசி வருகிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com