முன்னாள் கணவரை சீண்டிய சமந்தா! என்ன சொன்னார்?

Samantha Ruth Prabhu - Naga chaitanya
Samantha Ruth Prabhu - Naga chaitanya
Published on

தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக சமந்தா வலம் வருகிறார். தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார் நடிகை சமந்தா. தன்னுடன் ஜோடி சேர்ந்து நடித்த நாக சைதன்யாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு சில வருடங்களிலேயே பிரிந்தார். நாக சைதன்யாவுக்கும், 'பொன்னியின் செல்வன்' பட நடிகை சோபிதா துலிபலாவுக்கும் இடையே அடுத்த மாதம் ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற உள்ளது.

ஏற்கனவே மயோசிடிஸ் நோய் பாதிப்புக்குள்ளாகி இருந்த அவர் அதனையும் வெளிப்படையாக அறிவித்தார். தொடர்ந்து அதன் காரணமாக சினிமாவில் இருந்தும் சிறிது காலம் பிரேக் எடுத்தார். இதையடுத்து அவரது கம்பேக் திரைப்படமாக அண்மையில் சிட்டாடல் ஹனி பனி வெப் சீரிஸ் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி இருக்கிறது.

ஹாலிவுட்டில் ஹிட் அடித்த இந்த வெப் சீரிஸில் நடிகர் வருண் தவான், நடிகை சமந்தா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் சிட்டாடல் ஹனி பனி வெப் சீரிஸ் ப்ரோமோஷன் மற்றும் வெற்றி கொண்டாட்டம் அமேசான் பிரைம் spy-cy Rapid Fire With Samantha And Varun Dhawan நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சமந்தாவும் வருண் தவானும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி கேள்வி கேட்டுக்கொள்கிறார்கள்.

அதில் வருண் தவான் சமந்தாவிடம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தேவையில்லாமல் செலவு செய்த மிகப்பெரிய தொகை எது என்று கேள்வி கேட்கிறார். அதற்கு சமந்தா சற்றும் யோசிக்காமல் அது என்னுடைய EXக்கு நான் கொடுத்த விலைமதிப்பற்ற பரிசு என்று சிரித்துக் கொண்டே பதில் கொடுத்திருக்கிறார். பின்னர் உடனடியாக இந்த டாப்பிக்கை விட்டு நாம் சீக்கிரம் சென்று விடலாம் என்று கூறி அடுத்த கேள்விக்கு சென்று விட்டார். இந்த ப்ரோமோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
என்னுடைய அனைத்து விவாகரத்துக்கும் எனது தந்தைதான் காரணம் – வனிதா ஓபன் டாக்!
Samantha Ruth Prabhu - Naga chaitanya

மேலும் தற்போது சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையைப் பற்றி பேசிய சமந்தா, "நான் தற்போது என்னுடைய வாழ்க்கையின் நல்ல காலக்கட்டத்தில் இருக்கிறேன். உண்மையாகச் சொல்கிறேன், நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்" என்று பேசினார்.

நடிகை சமந்தா சமீப காலமாக நாக சைதன்யாவுடன் தனது விவாகரத்திற்கு பிறகு உணர்ச்சி ரீதியான பாதிப்புகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com