
தனுஷின் ராயன் படம் விறுவிறுப்பாக தயாராகி வரும் நிலையில், இந்த படத்தின் மாஸ் அப்டேட் ஒன்றை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனுஷ், தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தனுஷ் தனது 50-ஆவது படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தின் பெயர் தான் ‘ராயன்’ இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தில் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே சூர்யா, சுதீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தையே களமிறங்கியுள்ளார் நடிகர் தனுஷ். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் அப்டேட் அவ்வப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளறியுள்ளது. தற்போது படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்ட முறையில் ஜூன் 1 ஆம் தேதி ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர் ரஹ்மானின் கான்செர்ட் நடைபெறும் எனவும், மேலும் இதுவரை தனுஷை வைத்து படம் இயக்கிய இயக்குனர்களை வரவைத்து அவர்களை சிறப்பிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலையடுத்து தனுஷ் ரசிகர்கள் குதூகலத்தில் உள்ளனர். தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் திரைப்படம் ஜூன் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் வெளியானது. இப்பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்கம் செய்துள்ளார். தனுஷ் எழுத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இந்த பாடலை தனுஷ் - ஏ.ஆர்.ரஹ்மானும் சேர்ந்து பாடியுள்ளனர். இந்த பாடல் ஹிட்டான நிலையில், 2வது பாடலும் ட்ரெண்டானது.
இந்த நிலையில் ராயன் படத்துடைய பின்னணி இசை நிறைவு பெற்றுள்ளதாக தனுஷ் தனது சமூக வலைதள பக்கங்களில் அப்டேட் கொடுத்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ராயன் படத்தின் ஆக்சன் காட்சியுடன் அவர் வெளியிட்டுள்ள பதிவு தனுஷ் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. பின்னணி இசை நிறைவு பெற்றுள்ளது. புயல் வரப்போகிறது என்று தனுஷ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.