வெற்றிமாறனின் 'விடுதலை' வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட்!

வெற்றிமாறனின் 'விடுதலை'  வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட்!

நடிகர் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விடுதலை. இரண்டு பாகங்களாக விடுதலை படம் உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் மார்ச் 31ம் தேதி ரிலீசாகவுள்ளது. இத்திரைப்படம் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது.

படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் ஜிவி பிரகாஷ்குமாரின் தங்கை பவானிஸ்ரீ உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் வெற்றிமாறன், இசையமைப்பாளர் இளையராஜாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். அவரது இசையில் பாடல்கள் மிக சிறப்பாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது.

படத்தின் முதல் பாகம் அடுத்த மாதத்தில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பர்ஸ்ட் சிங்கிள், கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் பாடியுள்ள பாடல், காதல் மெலடியாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் பாடலை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிப்ரவரி 8 ஆம் தேதி ஆல்பத்தின் முதல் பாடலை வெளியிடுவதன் மூலம் விளம்பரங்களைத் தொடங்க தயாரிப்பு திட்டமிட்டுள்ளது. சூரி மற்றும் விஜய்சேதுபதி முக்கிய வேடங்களில் நடித்துள்ள விடுதலை, ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் பேனரின் கீழ் எல்ரெட் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.

வெற்றி மாறனின் விடுதலை படம் பல்வேறு எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகள் விற்றுத் தீர்ந்துள்ளதாக படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலை படத்தின் டிஜிட்டல் ரைட்சை ஜீ5 நிறுவனமும் சாட்டிலைட் ரைட்சை கலைஞர் டிவியும் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com