
நடிகர் ரெடின் கிங்ஸ்லியும், சீரியல் நடிகை சங்கீதாவும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது இவர்கள் இருவருக்கும் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
தமிழ் திரையுலகில் தற்போது, பிரபலமான காமெடி நடிகராகவும் துணை நடிகராகவும் வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. இவர் பெரும்பாலும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில்தான் நடித்திருக்கிறார். அப்படிதான் டாக்டர் படத்தில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார். பிறகு இவருக்கு கால்சீட் குவிந்து வருகிறது.
பெங்களூருவில் வேலை பார்த்து வந்த இவர், திரையுலகில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன், சென்னைக்கு வந்துவிட்டார். டாக்டர், கான்ஜூரிங் கண்ணப்பன் உள்ளிட்டவை இவர் நடித்ததில் சில ஹிட் படங்களாகும். ரெடின் கிங்ஸ்லி, கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி சீரியல் நடிகையும், சினிமா துணை நடிகையுமான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். மிக சிம்பிளாக நடந்த இவர்களின் திருமண விழாவில் வெகு சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். அதன் பின்னர் சில திரை பிரபலங்கள் இவரது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
சங்கீதா, ஏற்கனவே திருமணமானவர். இவருக்கு ஒரு வளர்ந்த மகனும் இருக்கிறார். ஒரு நிகழ்வில் சந்தித்த இவர்கள் இருவருக்குள்ளும் நல்ல புரிதல் ஏற்பட, அது நாளடைவில் காதலாக மாறி திருமணத்திலும் முடிந்தது. ஒரு நடிகர் 46 வயதில் திருமணம் செய்வது பெரிய விஷயம் என்றாலும், கிங்ஸ்லியின் திருமணம் குறித்து ஊரே பேசியது.
இந்த நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார். அதற்கு பிறகு அடிக்கடி போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். ரெடீம் கிங்ஸ்லிக்கு இப்போது 47 வயதாகிறது. அதுபோல அவருடைய மனைவி சங்கீதாவிற்கு 46 வயது ஆகிறது. இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தை நேற்று பிறந்து இருக்கிறது. இந்த தகவலை நேற்று சோஷியல் மீடியா பக்கங்களில் சங்கீதா பகிர்ந்து இருந்தார். இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.