விமர்சனம்: ரெட்ரோ - படத்தின் மிகப்பெரிய பலம் 'சூரியா'!
ரேட்டிங்(3 / 5)
சூரியா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நீண்ட எதிர்பார்பில் வந்துள்ள படம் ரெட்ரோ.
தூத்தூக்குடி மாவட்டத்தில் உள்ள பூசாரி ஒருவரின் குழந்தையாக இருக்கிறார் சூரியா. சிலர் சூரியா பூசாரி அப்பாவை கொன்று விட, சூரியாவை, அந்த பகுதியில் தாதாவாக இருக்கும் ஜோஜூ ஜார்ஜின் மனைவி வளர்க்கிறார். இது ஜார்ஜ்கு பிடிக்கவில்லை. வளரும் பருவத்தில் ஜார்ஜின் எதிரிகளை சூரியா அடித்து துவம்சம் செய்கிறார். இதனால் ஜார்ஜின் அன்புக்கு பாத்திரமகிறார்.
சூரியாவின் காதலி பூஜா ஹெக்டே அடிதடியை விட்டு விட சொல்கிறார். சூரியா ஏற்று கொள்கிறார். இது அப்பா- மகனுக்குமான பிரச்சனையாக மாறுகிறது. இந்த பிரச்னையில் சூரியா அப்பா ஜார்ஜ் கையை வெட்டி விட கல்யாணம் நின்று விடுகிறது. சூரியா சிறை சென்று விடுகிறார். பூஜா வேறு நாட்டிற்கு சென்று விடுகிறார். சிறையில் இருந்து தப்பி பூஜா இருக்கும் இடத்திற்கு செல்கிறார் சூரியா. சென்ற இடத்தில் சிலர் அடிமைகளாக இருக்கிறார்கள். இவர்களை மீட்கிறாரா என்பது தான் கதை.
படத்தின் மிகப்பெரிய பலம் சூரியாவின் நடிப்புதான். தனக்கு ஒரு வெற்றி வேண்டும் என காட்சிக்கு காட்சி உழைத்திருகிறார். சிரிக்கவே தெரியாத ஒரு மனிதன் என்ற கேரக்டரில் சரியாக பொருந்தி போகிறார். சிரிக்க தொடங்கும் காட்சிகளில் 'ஆஹா' சொல்ல வைக்கிறார். ஒட்டு மொத்த படத்தையும் தன் தோள்களால் தாங்குகிறார் சூரியா. பூஜா ஹெக்டே சிறிய சிறிய உணர்வுகளால் நம் நெஞ்சை தொடுகிறார். ஜார்ஜ் இப்படத்தில் முதன் முறையாக தமிழில் முழு திறமையையும் காட்டி உள்ளார்.
முதல் பாதி படம் வேகமாக நகர்கிறது. இரண்டாம் பாதி கிளாடியேட்டர் படம் பார்த்த உணர்வு வருகிறது. இந்த விஷயத்தை தவிர்த்திருந்தால் படம் சிறப்பான படமாக வந்திருக்கும். சந்தோஷ் நாராயணின் இசையில் கண்ணாடி பூவே பாடல் நன்றாக இருக்கிறது. இதை விட இளைய ராஜா இசையில் வெளிவந்த ஜானி பட பாடல் இன்னும் சிறப்பாக உள்ளது. படத்தின் ஒளிப் பதிவில் சண்டை காட்சிகள், அந்தமான் தீவுகள் அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளன.
சூர்யாவின் சமீபத்திய படங்களுடன் ஒப்பிடுகையில், இப்படம் 'much better' என்ற வகையிலும், சூர்யாவின் நடிப்பும் உழைப்பும் படத்திற்கு மிகப் பெரிய பலம் என்பதாலும், 'ரெட்ரோ'அவருக்கு ஒரு 'கம் பாக் என்று உறுதியாக சொல்லலாம்.