வேட்டையன் படத்தில் இணைந்த ரித்திகா சிங்... வைரலாகும் போட்டோ!

Rajinikanth - Ritika Singh
Rajinikanth - Ritika Singh

ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படப்பிடிப்பில் தற்போது ரித்திகா சிங் இணைந்துள்ள நிலையில், தலைவருடன் ரித்திகா சிங் எடுத்துக்கொண்ட மாஸ் புகைப்படம் வைரலாகி வருகிறது.

மாதவனின் இறுதிச் சுற்று படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை ரித்திகா சிங். அதற்கு பிறகு, சிவலிங்கா போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றார். ஆனால், அதற்கு பிறகு, நடிகை ரித்திகா சிங்கிற்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நடிகை ரித்திகா சிங் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தில் நடிப்பதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் 600 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, ரஜினிகாந்த் கௌரவத் தோற்றத்தில் நடித்த லால் சலாம் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக சராசரியான வரவேற்பைப் பெற்றது.

ஜெய்பீம் படத்தின் மூலம் உலகப் புகழ்பெற்ற இயக்குனர் த.செ. ஞானவேல் தனது 2வது படமே ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது படத்திற்கு வேட்டையன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தில், அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி இவர்களுடன் நடிகை ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கடந்த சில மாதங்களாக 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்புகள் தென்தமிழக பகுதிகளான நெல்லை, குமரியில் நடந்தது. அதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் கடப்பாவில் படப்பிடிப்புகள் நடந்தது. இதைத் தொடர்ந்து, ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. வேட்டையன் படத்தின் படப்பிடிப்புகள் மார்ச் மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
விடுதலை படத்தை மிஸ் செய்த சீமான்... எந்த கேரக்டர் தெரியுமா?
Rajinikanth - Ritika Singh

இந்நிலையில், வேட்டையன் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துவரும் நடிகை ரித்திகா சிங், வேட்டையன் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதில், லெஜெண்ட்ரி தலைவர் ரஜினிகாந்த் அவருடைய அருளும், அவரது ஆத்மாவும், அவரது இருப்பும் நிஜமாகவே நிகரற்றது. இப்போது அவருடன் இணைந்து பணிபுரிந்து வருகிறேன். இந்த வாய்ப்புக்காக அவருக்கு என்றென்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com