விடுதலை படத்தை மிஸ் செய்த சீமான்... எந்த கேரக்டர் தெரியுமா?

Viduthalai Part 1
Viduthalai Part 1

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன விடுதலை படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணியதாக சீமான் கூறி இருக்கிறார்.

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் விடுதலை. இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருந்தார்.

மேலும், படத்தில் விஜய் சேதுபதி போராளியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். பவானி ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
Viduthalai Part 1

இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இந்த படத்தின் 2ஆம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.

இந்த நிலையில், விஜய் சேதுபதி நடித்துள்ள பெருமாள் வாத்தியார் கேரக்டரில் நடிக்க நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானையும் இயக்குனர் வெற்றிமாறன் அணுகியதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை சீமானே சமீபத்திய விருது நிகழ்ச்சி ஒன்றில் கூறி இருக்கிறார். அந்த சமயத்தில் தாடி வைக்க மாட்டேன் என சொன்னதாலும் வேறு சில காரணங்களாலும் சீமான் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாக சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com