
சினிமா துறையை சேர்ந்தவர்கள் பற்றிய கிசுகிசுக்களை அதிக ஆர்வத்துடன் பார்க்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருப்பதால் அது இணையத்தில் பெரிய அளவில் உடனே வைரல் ஆகிவிடுகிறது. அந்த வகையில் தான் தற்போது தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை ஒருவர் விபத்தில் இறந்து விட்டதாக இணையத்தில் படுவேகமாக பரவிய வதந்தி அனைவரையும் அதிர்ச்சியடையச்செய்துள்ளது.
அதுவேறும் யாரும் இல்லீங்க. நம்ம காஜல் அகர்வால் தான். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற மொழிப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்தவர் நடிகை காஜல் அகர்வால். திருமணமாகி குழந்தை பிறந்த பின்பு, மீண்டும் முன்புபோல சினிமாவில் களம் இறங்கிய காஜல், அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளையும், உணவு கட்டுப்பாடுகளையும் கடைபிடித்து பழைய கட்டுடலுக்கு வந்தார்.
தற்போது படங்களை தேர்வு செய்து அளவான படங்களிலேயே நடித்து வரும் இவர் சமீபத்தில் தெலுங்கில் வெளியான 'கண்ணப்பா'வில் பார்வதியாக நடித்திருந்தார். தற்போது 'இந்தியன்-3' படத்தில் நடித்து முடித்துள்ள காஜல் அகர்வால் 'ராமாயணா' படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் கார் விபத்தில் சிக்கியுள்ளார். அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் காலமாகிவிட்டார் என்பது போன்ற வதந்திகள் சில இணையதளங்களில் தீயாய் பரவி அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இந்த வதந்தியால் கோபமடைந்த நடிகை காஜல் அகர்வால் இதுகுறித்து தற்போது இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.
நான் விபத்தில் சிக்கி, இறந்துவிட்டதாக ஒரு செய்தியை இணையதளத்தில் பார்த்தேன். உண்மையில் இது வேடிக்கையாக இருக்கிறது. ஏனென்றால் இது முற்றிலும் பொய். கடவுளின் கருணையால் நான் மிகவும் நலமாக இருக்கிறேன் என உறுதிப்படுத்துகிறேன். இப்படி பொய்யான செய்தியை பரப்பவோ நம்பவோ வேண்டாம் என காஜல் அகர்வால் பதிவிட்டு இருக்கிறார்.
இதுபோன்ற வதந்திகள் எங்கிருந்து வருகிறது என்பது குறித்து சரியாக தெரியவில்லை. இந்நிலையில் சரியான நேரத்தில் காஜல் அகர்வால் கொடுத்த விளக்கத்தால் அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.