3 முறை விஜயை அணுகிய லிங்குசாமி - ஏன் ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்தது?

லிங்குசாமி இயக்கத்தில் விஜய் நடிக்க மறுத்த ரன், சண்டக்கோழி மற்றும் வேட்டை படங்கள் குறித்த சுவாரஸ்யமான பின்னணி தகவல்கள் இதோ!
Lingusami madhavan meera jasmin
Lingusami Run filmyoutube
Updated on

லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான 'ரன் ' திரைப்படத்தை மறுவெளியீடு செய்ய ஶ்ரீ சூர்யா மூவிஸ் நிறுவனம் தயாராக உள்ளது. இந்த திரைப்படம் நடிகர் மாதவனின் இமேஜை முற்றிலும் மாற்றியது. 2002 ஆம் ஆண்டில் வெளியான இந்த திரைப்படத்தில், ஆரம்பத்தில் மாதவனுக்கு பதில் விஜயை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது.

ரன் திரைப்படத்தின் மறு வெளியீடு தொடர்பாக ஊடகங்களை சந்தித்த அதன் இயக்குனர் லிங்குசாமி தனது சினிமா அனுபவங்களை விவரித்தார். ஒரு திரைப்படம் எப்போது வெற்றி பெறும்? என்பதை என்னால் கணிக்க முடியவில்லை. மறு வெளியீட்டின் போது படையப்பா, கில்லி போன்ற திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்றன. அதே நேரம் முதல் வெளியீட்டில் பெருவெற்றி பெற்ற 'குஷி ' திரைப்படம் மறுவெளியீட்டில் வெற்றி பெறாமல் போனது. ,

அப்போதைய காலகட்டத்தில் நன்றாக ஓடாத 'சச்சின் ' திரைப்படம் கூட தற்போது மறு வெளியீட்டில் நன்றாக ஓடியுள்ளது. மக்களின் மனநிலையை கணிக்க முடியாது. முன்பு எனது 'அஞ்சான்' திரைப்படம் வெளியான போது, நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக , அந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சரியாக போகவில்லை. அதே திரைப்படம் மறு வெளியீட்டின் போது நன்றாக ஓடியது.

ரன் திரைப்படம் மாதவன், மீரா ஜாஸ்மின் ரகுவரன், விவேக் ஆகியோர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைக்கதையை ஏவிஎம் நிறுவனத்திடம் கூறிய போது, அவர்கள் இந்த கதையை விஜயிடம் சொல்லி சம்மதம் வாங்குமாறு கூறியிருந்தனர். அப்போது விஜய்யிடம் கதை சொல்ல வேண்டுமென்றால் அவரை தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை தான் அணுக வேண்டும்.

நானும் சந்திரசேகரை அணுகி திரைப்படத்தின் கதையை கூறினேன். கதையைக் கேட்ட அவர் , விஜய் தற்போது 'தமிழன்' மாதிரியான சமூக சிந்தனை கொண்ட கதைகளின் நடித்து வருகிறார். தற்போது அவர் இந்த மாதிரியான கதை அம்சங்களில் கொண்ட திரைப்படங்களில் நடிக்க வேண்டும், என்ற இமேஜ் ஒன்றினை வைத்துள்ளார். அதனால் ஒரு பெண் பின்னால் சுற்றுவதை போன்ற கதைகளில் இப்போது நடிக்க மாட்டார் , என்று கூறினார்.

Lingusami approch vijay for 3 films
Lingusami and vijay Facebook

அதன் பின்னர் இந்த திரைப்படத்தில் மாதவன் உள்ளே வந்தார். படமும் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. லிங்குசாமி ரன் திரைப்படத்தில் மட்டுமல்ல , மேலும் 2 திரைப்படங்களில் விஜய் நடிக்க வைக்க அவர் அணுகினார். இரண்டாவதாக 'சண்டக்கோழி' திரைப்படத்தில் விஜய்யை நடிக்க வைக்க அவரை சந்தித்து பேசினார். படத்தின் முதல் பாதி கதையை கேட்ட விஜய் கதை நன்றாக இருக்கிறது என்று அடுத்த பாதியையும் கேட்டுள்ளார். இரண்டாவது பாதியில் ராஜ்கிரன் வரும் கதாபாத்திரத்தை கூறியவுடன் , விஜய் இந்த கதை வேண்டாம் செட்டாகாது என்று கூறி மறுத்துவிட்டார்.

இரண்டாவது பாதியில் ராஜ்கிரண் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பிறகு தான் இந்த திரைப்படம் விஷாலை வைத்து எடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. மூன்றாவது முறையாக 'வேட்டை' திரைப்படத்தில் விஜயை நடிக்க வைப்பதற்காக லிங்குசாமி அணுகியிருந்தார். இரண்டு கதாநாயகர்களின் கதையாக இருப்பதால் அதையும் விஜய் மறுத்துள்ளார். இப்படி 3 முறை விஜயை நடிக்க வைக்க லிங்குசாமி முயன்றும் இறுதிவரை அவரது ஆசை நிறைவேறவில்லை.

logo
Kalki Online
kalkionline.com