இமாச்சல ஆற்றில் மாயமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் சினிமா முகம்!

Sadai Duraisamy son Vetri Duraisamy
Sadai Duraisamy son Vetri Duraisamy gumlet.vikatan.com

சென்னை நகரத்தின் முன்னாள் மேயர், மனித நேய அறக்கட்டளை தலைவருமான சைதை துரை சாமியின் மகன் வெற்றி சமீபத்தில் கார் விபத்தில் சிக்கி, சட்லஜ் நதியில் மூழ்கி மாயமான செய்தி ஊடகங்களில் சில நாட்களாக வந்து கொண்டிருக்கிறது. தனது மகன் வெற்றியை பற்றி தகவல் தருபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் தரப்படும் என துரை சாமி அறிவித்துள்ளார்.             

வெற்றி அவர்கள் தனது தந்தையின் மனித நேய அறக்கட்டளையில் சில பொறுப்புகளை வகித்து வந்ததோடு மட்டுமில்லாமல் திரைப்பட துறையிலும் கவனம் செலுத்தி வந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு விததார்த், ரம்யா நம்பீசன் நடித்த என்றாவது ஒருநாள் படத்தை இயக்கி இருந்தார் வெற்றி.

EndraavathuOruNaal
EndraavathuOruNaal
Sadai Duraisamy son Vetri Duraisamy cinema life
Sadai Duraisamy son Vetri Duraisamy cinema life

ஜீ 5 தளத்தில் வெளியாவதற்கு முன்பே இப்படம் பலவேறு திரைப்பட விழாக்களில் திரையிட பட்டு உலக பார்வையாளார்களை ஈர்த்தது பல விருதுகளையும் பெற்றது. விவசாயத்தை பிரசாரமாக இல்லாமல் வாழ்விலோடு சொன்னதற்காக பாராட்டுக்களை பெற்றார் வெற்றி.

EndraavathuOruNaal
EndraavathuOruNaal
இதையும் படியுங்கள்:
என்னது தக்காளி அல்வாவா? வாங்க எப்படி செய்றதுன்னு பாப்போம்!
Sadai Duraisamy son Vetri Duraisamy

மீண்டும் படம் இயக்கும்  விருப்பத்தில் லொகேஷன் பார்க்க சென்ற இடத்தில்தான் சில நாட்களுக்கு முன்பு, வெற்றி நதியில் மூழ்கி மாயமானதாக சொல்கிறார்கள்.   இறந்திருக்கலாம் என்று கூட அஞ்சப்படுகிறது ஒரு சிறந்த படைப்பாளியாக வர வேண்டியவர் மீண்டு வருவாரா என தெரியவில்லை. எதையும் தாங்கும் இதயத்தை சைதை துரை சாமிக்கு இறைவன் தர வேண்டும் என பிராத்திப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com