என்னது தக்காளி அல்வாவா? வாங்க எப்படி செய்றதுன்னு பாப்போம்!

Tomato halwa
Tomato halwa

பொதுவாக தக்காளி இல்லாத வீடே இருக்காது. ஏனெனில் தக்காளி நம் அன்றாட உணவுகளில் பயன்படுத்தும் அத்தியாவசியமான ஒன்று. எதாவது இனிப்பாக செய்து சாப்பிட வேண்டுமென்று தோன்றினால் இந்த தக்காளியை வைத்தே சுவையான அல்வா செய்து சாப்பிடலாம். 30 நிமிடங்களில் தக்காளி ஹல்வா எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

தக்காளி – 4

கார்ன்ஃப்லவர் மாவு – 2 டீஸ்பூன்

தண்ணீர் – 1 கப்

ஏலக்காய் தூள் – 1/3 தேக்கரண்டி

சர்க்கரை – ¼ கப் அளவு

முந்திரி – 4 முதல் 6

நெய் – 3 டீஸ்பூன்

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் அளவுத் தண்ணீர் ஊற்றி அதில் தக்காளியை சேர்த்து வேக வைக்கவும். தக்காளியின் மேல் தோலை நீக்கும் அளவிற்கு வேக வைக்க வேண்டும். தக்காளி நன்றாக வெந்ததும் தோலை நீக்கிவிட்டு குளிரவைக்கவும்.

2.  தக்காளி குளிர்ந்தவுடன் அதனை நன்றாக அரைக்க வேண்டும்.

3.  ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃபலவர் மாவுடன் தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கலக்கி வைத்துக்கொள்ளவும்.

4.  பின் ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் அளவு நெய் சேர்த்து சூடாக்கவும். அதில் முந்திரி சேர்த்து பொன்னிறமாகுவும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது அதே நெய்யில் அரைத்த தக்காளியை சேர்த்து நன்றாக சமைக்கவும். சிவப்பு நிறம் மாறும் வரை 4 நிமிடங்கள் சமைக்கவும்.

இதையும் படியுங்கள்:
வட இந்தியா ஸ்பெஷல் Dal Makhani செய்யலாம் வாங்க!
Tomato halwa

5.  இப்போது தக்காளி கலவையில் சர்க்கரை மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்த்து. அதனுடன் தண்ணீர் மற்றும் கலந்து வைத்த கார்ன்ஃப்லவர் மாவு சேர்த்து நன்றாக கிளரவும். அப்போதுதான் கெட்டியாக மாறும். அவ்வப்போது சிறிது சிறிதாக நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு 15 நிமிடங்கள் கெட்டியாகும் வரை கிளறிக்கொண்டே வேகவிடுங்கள்.

இறுதியில், அல்வா பதத்துக்கு வந்ததும் முந்திரி சேர்த்து இறக்கினால் சுவையான தக்காளி அல்வா ரெடி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com