அக்காவுக்கு முன் திருமணம் செய்யவுள்ள தங்கை.. நடிகை சாய்பல்லவி சகோதரிக்கு விரைவில் டும் டும்..!

பூஜா கண்ணன் - வினீத்
பூஜா கண்ணன் - வினீத்

நடிகை சாய் பல்லவியின் சகோதரியான பூஜா கண்ணனின் நிச்சயதாரத்தம் எளிமையான முறையில் நடைபெற்றது.

மலையாள படத்தில் மலரே என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. தொடர்ந்து ரவுடி பேபி பாடல் மூலம் எக்கச்சக்க ரசிகர்களின் மனதை வென்றுவிட்டார். இந்த பாடல் படைத்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை. அப்படி இவரை போலவே ஒருவர் சினிமா உலகில் நுழைந்தார். அச்சு அசல் சாய் பல்லவி போன்று இருக்கும் யார் இவர் என பார்த்தால் நடிகை சாய்பல்லவியின் சகோதரி பூஜா கண்ணன். இவர் 2021ஆம் ஆண்டு ஸ்டண்ட் சில்வா இயக்கத்தில் உருவான சித்திரை செவ்வானம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான நடிகை சாய் பல்லவியின் சகோதரி பூஜா கண்ணன், கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனது காதலர் வினீத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அடடே சாய்பல்லவியை முந்திவிட்டாரே என்றெல்லாம் பேச்சுக்கு எழுந்து வந்த நிலையில், தற்போது இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது.

சாய் பல்லவி சகோதரி
சாய் பல்லவி சகோதரி

இருவீட்டார் சம்மதத்துடன் சாய்பல்லவியின் வீட்டில் எளிமையாக நடைபெற்ற இவரின் நிச்சயதார்த்தம் ஆட்டம், பாட்டம் என களைகட்டியது.

இந்த நிகழ்வில் சாய்பல்லவியும் உறவினர்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
Micro Marketing என்றால் என்ன தெரியுமா? 
பூஜா கண்ணன் - வினீத்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com