நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு! அதிர்ச்சியில் உறைந்த பாலிவுட்..!

சல்மான் கானுடன் நடித்த விவகாரத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் நடிகர் டைகர் ஷெராப் மீது தாக்குதல் நடத்தியுள்ள முழு விவரங்கள்.
Tiger Shroff
Tiger ShroffX
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

பாலிவுட் இளம் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. 2014 ஆம் ஆண்டு 'ஹீரோபண்டி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் டைகர் ஷெராப். இவரது முதல் திரைப்படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பாலிவுட்டின் முன்னணி நடிகராக மாற்றியது. அதைத் தொடர்ந்து அவர் நடித்த பாகி , வார், பாகி 2 , ஸ்டூடண்ட் ஆப் தி இயர் போன்ற திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெற்றது. பெரிய நடிகராக இருந்தாலும் , ஹிருத்திக் ரோஷன் போன்றே , டைகரும் ஒரே நேரத்தில் பல படங்களில் கமிட் ஆகாமல் , வருடத்திற்கு ஒரு படம் என்ற அளவிலே நடித்து வருகிறார்.

டைகர் ஷெராப் வெற்றியின் பின்னணியில் அவரது குடும்பம் இருக்கிறது. அவரது தந்தை பாலிவுட்டின் பிரபலமான ஆக்சன் ஹீரோவான ஜாக்கி ஷெராப் ஆவார். ஜாக்கி ஷெராப் நீண்ட காலமாக பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து 'உத்தர் தக்ஷிண்' என்ற ஹிந்திப் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

நீண்ட இடைவேளைக்கு பின் ரஜினியின் 'ஜெயிலர்' திரைப்படத்தில் 'காம்தேவ்' என்ற கதாபாத்திரத்தில் ஜாக்கி ஷெராப் கேமியோவாக தோன்றியிருப்பார். அது போல் விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தில் 'ஷர்மா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நேற்று மாலை மும்பையின் ஜூகு பகுதியில் , டைகர் கால்பந்து விளையாடிவிட்டு வீடு திரும்பிய போது , அவர் மீது துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டது. இந்த சம்பவத்தில் அவரது பிஎம்டபிள்யூ கார் மீது 3 குண்டுகள் பாய்ந்துள்ளது. இந்த தாக்குதலில் டைகர் காயம் ஏதுமின்றி உயிர் தப்பியுள்ளார். அதேநேரம் அவரது வாகன ஓட்டுநர் வலது கையில் குண்டு உரசிச் சென்று காயம் ஏற்படுத்தியது. காரில் இருந்த இன்னொரு நபருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தற்போது அவர் மும்பை நனாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவக் குழுவினர் சிகிச்சை பெற்று வரும் இருவரின் உடல்நிலை சீராக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Tiger Shroff
Tiger Shroff Lawrance NDTV

இந்த தாக்குதலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த அனில் பண்டிட் மற்றும் ஹர்மன் சந்து ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். இவர்கள் தங்கள் முகநூல் பதிவில்

"சல்மான் கானுடன் யாரும் பணியாற்ற கூடாது என்று நாங்கள் எச்சரித்தும் மீறியதால் டைகர் ஷெராப்பை தாங்கள் குறி வைத்ததாக தெரிவித்துள்ளனர். எங்கள் பேச்சைக் கேட்காதவர்கள் அடுத்ததாக பாதிக்கப்படுவார்கள், பொறுத்திருந்து பாருங்கள்," என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

லாரன்ஸ் கும்பல் முன்பே சல்மான் கானை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சல்மான் கானின் நெருங்கிய நண்பர் மற்றும் முன்னாள் மந்திரி பாபா சித்திக்கை துப்பாக்கி சுட்டு கொலை செய்தனர். இந்த சம்பவம் உலகம் முழுக்க மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டைகர் மீதான துப்பாக்கி சூட்டில் அவருக்கு காயம் எதுவும் இல்லை என்று டிசிபி மோஹித் கார்க் உறுதிப்படுத்தினார்.

துப்பாக்கி சூடு நடைபெற்ற பகுதியை காவல்துறையினர் சுற்றி வளைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.இது குறித்து மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மும்பை காவல் ஆணையரை தொடர்பு கொண்டு , குற்றவாளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

logo
Kalki Online
kalkionline.com