பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் படத்தை இயக்கும் தமிழ் இயக்குநர் யார் தெரியுமா?

Salman Khan vishnu vardhan
Salman Khan vishnu vardhan
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

பாலிவுட் நடிகர் சல்மான் கான் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கரண் ஜோஹருடன் இணைகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தை தமிழ் பட இயக்குனர் இயக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

மனிஷ் ஷர்மா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்த Tiger படம் தீபாவளிக்கு வெளியானது. 300 கோடி செலவில் எடுத்த இந்த படம் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 450 கோடி வசூல் செய்தது. மாபெரும் ஹிட் கொடுத்த சல்மான் கானின் அடுத்தப்படம் குறித்த செய்திகள் வெளியானது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் The bull என்று பெயர் வைத்த படத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ளார். தமிழ்நாட்டில் பிறந்த இவர் இதுவரை பில்லா, சர்வம், ஆரம்பம் போன்ற தமிழ்ப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் அஞ்சலி, இருவர், எந்திரன், இசை போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

விஷ்ணுவர்தன் 2021ம் ஆண்டு பாலிவுட்டில் தடம் பதித்தார். இவர் எடுத்த Sershaa படம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை கரண் ஜோஹரின் தர்மா ப்ரொடக்ஷன் தயாரித்தது. இதையடுத்து இவருடைய அடுத்த படம்தான் The bull. சல்மான் கான் நடிக்கும் இந்த படத்தை தயாரிப்பது விஷ்ணுவின் முதல் பாலிவுட் படத்தை தயாரித்த கரண் ஜோஹரின் தர்மா ப்ரோடக்ஷன் தான்.

இதற்கு முன்னர் 1998 ம் ஆண்டு கரண் ஜோஹர் இயக்கிய முதல் படமான Kuch kuch hota hai என்ற படத்தில் சல்மான் கான் கேமியோ ரோல் செய்தார். அதன்பின்னர் இருவரும் சேர்ந்து படம் எடுக்கும் வாய்ப்பு அமையவே இல்லை. இப்போது 25 வருடங்களுக்கு பிறகு கரண் ஜோஹர் தயாரிப்பில் சல்மான் கான் நடிப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

The bull படத்தில் சல்மான் கான் மிலிட்டரி மேனாக நடிக்கவுள்ளார். இதற்காக அவர் கடும் உடற்பயிற்சி செய்து உடல் வடிவத்தை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரி ஆரம்பித்து ஆகஸ்ட் மாதம் முடிவடையும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்திற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பாம்ப் ( Bomb) வெடிக்கும் காட்சிகள் எல்லாம் VFX மூலம் காமிக்காமல் Art direction குழுவுடன் கலந்துரையாடி புதிய முயற்சி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. மேலும் மிலிட்டரி மேன் ஆடை மற்றும் சீருடைகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது என்றும் செய்திகள் வந்துள்ளது.

The bull படத்தை அடுத்து சல்மான் கான் தொடர்ந்து நிறைய படங்கள் நடிவுள்ளார். சல்மான் கானின் Dabangg 4, kick 2, prem ki shadi ஆகியவை அடுத்த வருடம் வரப்போகும் படங்கள். இந்நிலையில் the bull படம் x தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com