நடிகர் நாகசைதன்யா மற்றும் சமந்தா மீண்டும் இணைந்து விட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்திய சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யா மற்றும் சமந்தா ஆகியோர் வலம் வந்தனர். நீண்ட கால காதலை தொடர்ந்து இருவரும், 2017-இல் திருமணம் செய்து கொண்டனர்.
4 ஆண்டுகள் நீடித்த இந்த மணவாழ்க்கை 2021-இல் முடிவுக்கு வந்ததாக அவர்கள் இருவரும் தெரிவித்தனர். இனி பிரிந்து வாழப்போவதாக சமூக வலைதள பக்கங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் சமந்தா நாக சைதன்யா இடையிலான உறவில் உள்ள விரிசல் குறைந்திருப்பதாக அவர்களது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இருவருக்கும் ஹாஷ் என்ற பிரெஞ்சு புல்டாக் செல்ல நாய் உள்ளது. சமந்தாவும் நாக சைதன்யாவும் திருமண உறவில் இருந்தபோது, இந்த செல்ல நாயை பராமரித்து வந்தனர்.
இந்நிலையில் நாக சைதன்யா சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் புகைப்படம் ஒன்றில் இந்த ஹாஷ் நாய், அவரது மடியில் உள்ளது. இந்த போட்டோவை பதிவிட்டு அவர் வைப் (vibe) என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இந்த நாயை சமந்தாவும், நாக சைதன்யாவும் தற்போதும் வளர்த்து வருவதாக கூறப்படுகிறது.
நாக சைதன்யாவின் புகைப்படத்தில் ரசிகர்கள் சுவாரசியமான கமெண்ட்களை வெளியிட்டு வருகின்றனர். இருவரும் கசப்புணர்வை மறந்து இணைந்து விட்டார்களா? என்று அவர்கள் கமெண்ட்களில் கூறியுள்ளனர். சமீபத்தில் தான் இந்த நாயை சமந்தா வைத்திருந்தார் என்று இன்ஸ்டாகிராம் யூசர் ஒருவர் கூறியுள்ளார். செல்ல நாய்க்குட்டி தொடர்பான புகைப்படங்களை சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.