இன்று விமான நிலையத்திற்கு வந்த சமந்தா! வைரல் வீடியோ!

இன்று விமான நிலையத்திற்கு வந்த சமந்தா! வைரல் வீடியோ!
Published on

ஒரு சில மாதங்களுக்கு முன் சமந்தா myositis என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில், மேற்கொண்டு சிகிச்சை எடுத்து வரும் நிலையில் இன்று அவர் மும்பை விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தபடி முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் சமந்தா. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் நடிகை சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் விவாகரத்து ஏற்பட்ட நிலையில், சினிமாவில் அதிகமாக கவனம் செலுத்தி முன்னுக்கு வந்துகொண்டிருந்தார். அச்சமயம், அவருக்கு myositis என்ற அரிய வகை நோய் இருப்பதாக அறியப்பட்ட நிலையில் அவர் அதற்காக சிகிச்சையும் தொடர்ந்து எடுத்துவருகிறார்.

மேலும் சிகிச்சைக்காக அவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. அவர் சிகிச்சையில் இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியானது.

இந்நிலையில், சமந்தா இன்று மும்பை விமான நிலையத்திற்கு வந்திருக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ள நிலையில், இணையத்தில் அந்த வீடியோ படு வைரலாகி வருகிறது.

அவரது இந்த வீடியோவைக் கண்ட பலரும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com