திருமண கவுனை வேறு மாடலில் மாற்றிய சமந்தா… வைரலாகும் க்ளிக்ஸ்!

Samantha
Samantha

சமந்தா தனது திருமண கவுனை வேறு மாடலில் மாற்றி, விருது விழா ஒன்றில் உடுத்தியிருக்கிறார். இதனால், அவர் உடையை ரீ-யூஸ் செய்த முறை அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோ மற்றும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்திய சினிமா ரசிகர்களின் மனதில் பெரிய இடத்தைப் பிடித்திருக்கும் சமந்தா, சில காலமாக மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு இந்த அரிய வகை தசை நோயிலிருந்து ஓரளவு குணமானார். சிறிது காலம் சினிமாவிலிருந்து விலகியிருந்த சமந்தா, தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். பின்னர் அவர் படங்களின் அப்டேட்டுகள் மட்டுமே அவ்வப்போது வெளிவந்தன.

சமந்தா கடந்த 2017ம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இதனையடுத்து அவர்கள் இருவரும் 2021ம் ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தார்கள். அந்த திருமணத்தில், கிறிஸ்துவ முறைப்படி ஒரு வெள்ளை நிற கவுனை அணிந்திருந்தார், சமந்தா. தற்போது அந்த உடையைதான் வேறு மாடலில் மாற்றி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

பொதுவாக, திரைத்துறையில் ஒருமுறை அணிந்த உடையை மீண்டும் அணிய யோசிப்பார்கள். அந்த ஒருமுறை அணிந்த ஆடைக்கு பின்னால் எத்தனையோ ஆடை தயாரிப்பாளர்களின் கடின உழைப்பு அடங்கியிருக்கும். அதேபோல், ஒருமுறை பயன்படுத்திய பிறகு அந்த உடையின் மதிப்பு அப்படியே அறையின் பீரோவில் முடங்கியிருக்கும்.

அந்தவகையில், சமந்தா தனது கவுனை ரி-பர்பஸ் செய்து உடுத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். “இன்று நான் அணிந்திருக்கும் ஆடை என்னுடைய பழைய உடையை மாற்றியமைத்தது. எனது பழக்கவழக்கங்களை மாற்றுவதுபோல இந்த பழைய ஆடைகளை மாற்றி உடுத்திக்கொள்கிறேன். கவனித்து எடுக்கும் ஒவ்வொரு சிறிய முடிவும் வாழ்க்கையில் முக்கியமானது" என்று பதிவிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்:
கசிந்தது ராமாயணம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
Samantha

மேலும் இதன் வீடியோவை பகிர்ந்த உடையை டிசைன் செய்தவர், “புதிய நினைவுகளை உருவாக்க முடியும். சொல்வதற்கு நிறைய கதைகள் இருக்கின்றன. புதிய நினைவுகளை உருவாக்கவும், மற்றொரு புதிய கதையை உருவாக்கவும் இந்த உடைக்கு புது வடிவத்தைக் கொடுத்துள்ளோம்.” என்று பதிவிட்டார்.

பிரபல நிறுவனம் நடத்திய Elle Sustainability Awards என்ற விருது விழாவில் சமந்தாவிற்கு, நடிகையாக மட்டுமல்லாது, சுற்று சூழலுக்கு பாதிப்பில்லாத வாழ்க்கை முறையை முன்னெடுத்து, பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருப்பதற்காக விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com